Categories: Cinema News latest news

படைத்தலைவனுக்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல… சண்முகப்பாண்டியன் உருக்கம்

அன்புவின் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த படைத்தலைவன் படம் பல தடைகளைத் தாண்டி இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியனின் ஆக்ஷன் படம். அதுவும் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு வந்துள்ளது என்பதாலும், விஜயகாந்தை ஏஐயில் காட்ட இருப்பதாலும் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்தப் படத்துக்கான பிரிவியு ஷோவை நேற்று போட்டார்கள். படம் பார்த்த பிரபலங்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். பிரேமலதா, விஜயபிரபாகரன், ராதாரவி உள்பட பலரும் படம் குறித்துப் பேசினர். படத்துக்கு இளையராஜா பிரமாதமாக இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பிரிவியு ஷோ முடிந்ததும் படத்தின் கதாநாயகன் சண்முகப்பாண்டியன் என்ன சொல்கிறார்னு பாருங்க.

உங்களுக்கே தெரியும். படம் எவ்வளவு பெரிய பிரச்சனைக்குப் பிறகு வந்துருக்குன்னு. எங்க மாமா சுதீஷூக்கு நன்றி. ஆடியோ லாஞ்ச், இன்டர்வியுல சொன்னதுன்னு ஒரு ரிலீஸ் தேதியை அறிவிச்சி அது தள்ளிப் போய் பிரச்சனை மேல பிரச்சனை வந்து இன்னைக்கு வந்துருக்கு. ஆடியன்ஸ் எல்லாரும் தியேட்டருக்குப் போய் சப்போர்ட் பண்ணி பலன் தரணும்.

இந்தப் படம் ஒரு பெரிய பாடம். சினிமாவுல என்ன பண்ணனும். பண்ணக்கூடாதுன்னு கத்துக் கொடுத்துருக்கு. ஆடியன்ஸாகிய நீங்க தான் அதைப் பார்த்து நான், அன்பு எல்லாரும் எப்படி பண்ணிருக்கோம்னு சொல்லணும். நீங்க கண்டிப்பா தியேட்டர்ல போய் பார்த்து என்ஜாய் பண்ணுவீங்க. நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதையை விஜயகாந்த் முதலில் கேட்டு ஓகே பண்ணி இருக்கிறார். அவருடைய சம்மதத்தின் பேரில்தான் சண்முகப்பாண்டியன் படத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படத்தைக் காண இன்று விஜயகாந்த் நம்மிடையே இல்லை என்பது நமக்கு மீளாத்துயரையே தருகிறது. நமக்கே இப்படி என்றால் அவரது மகன் சண்முகப்பாண்டியன் மற்றும் குடும்பத்தாருக்கு எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அதற்காகவாவது இந்தப் படம் நிச்சயம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v