ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. சிம்பு எடுத்த திடீர் முடிவு! அப்போ அது சாத்தியமே இல்ல
Simbu: கேப் எடுத்தது போதும். இனிமேல் பேக் டு பேக் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார் சிம்பு. அதை தக் லைப் இசை வெளியீட்டு விழாவிலும் கூறியிருந்தார். இனிமேல் உங்களுக்காக அடுத்தடுத்து படங்களை நான் கொடுத்துக் கொண்டே இருப்பேன். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் கண்டிப்பாக வரும் என கூறியிருந்தார் சிம்பு.
அதன் அடிப்படையில் தக் லைப் திரைப்படத்திற்கு பிறகு மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படமும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படமும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படமும் என மூன்று படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன. இதில் அவருடைய 49வது படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
தப்பிய சிம்பு49:
ஆனால் அமலாக்க துறையின் கிடுக்குப்பிடியில் டான் பிக்சர்ஸ் நிறுவனம் மாட்டிக் கொள்ள ஏற்கனவே அதன் தயாரிப்பில் இருந்த இட்லி கடை, பராசக்தி போன்ற திரைப்படங்களின் நிலைமை என்ன ஆகும் என அனைவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். நல்லவேளையாக சிம்புவின் 49 வது படம் பூஜை போட்டதோடு சரி படப்பிடிப்பை ஆரம்பிக்கவில்லை. அதனால் சிம்புவின் படம் தப்பித்தது.
ஆனால் இப்போது பிரச்சனை எல்லாம் சமூகமாக தீர்க்கப்பட்டு இட்லி கடை மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் முயற்சியில் இருப்பதாக சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறினார். அமலாக்க துறையின் கிடுக்குப்பிடியில் டான் பிக்சர்ஸ் நிறுவனம் சிக்கியது என தெரிந்த உடனே சிம்புவின் 49 வது படம் டிராப் ஆகிவிட்டது என்ற ஒரு தகவல் வெளியானது.
சிம்புவின் முடிவு:
தனஞ்செயன் இதைப்பற்றி கூறும் பொழுது டிராப்பாகவில்லை. இப்போதைக்கு சிம்பு அதை நிறுத்தி வைத்துள்ளார். ஆனால் டான் பிக்சர்ஸ் நிறுவனம் எல்லா பிரச்சனைகளையும் இப்போது முடித்துவிட்டு சிம்புவின் படத்தை தயாரிக்க ரெடியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் சிம்பு தரப்பிலிருந்து இன்னும் எந்த ஒரு முடிவும் வரவில்லை. அவருடைய முடிவுக்காக தான் காத்திருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் இட்லி கடை மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தான் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது கவனம் செலுத்தி வருகிறது. அதன் பிறகுதான் சிம்புவின் படத்தை டேக் ஓவர் பண்ணுவார்கள். இன்னொரு பக்கம் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவலும் வெளியாகி வருகிறது.
simbu
கேங்ஸ்டர் படம்:
அதுவும் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகத் தான் உருவாகப் போகிறதாம். ஒரு வேளை சிம்பு அவருடைய 49 வது படத்தை ஹோல்டு செய்து விட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கலாம் அல்லது அடுத்த இரு படங்களில் ஏதாவது ஒரு படத்தை கையில் எடுக்கலாம் என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
