Connect with us

Cinema News

STR49-ல் அதிரடி மாற்றம்!… இனிமேதான் சிம்புவோட ஆட்டத்தை பார்க்கப் போறீங்க!…

அமலாக்கத் துறையின் கிடுக்குப்பிடியில் மாட்டிக்கொண்டிருக்கிறது டான் பிக்சர்ஸ் நிறுவனம். ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. வெளிநாட்டில் எங்கேயோ இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. இதனால் அவருடைய தயாரிப்பில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன. சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படம், தனுஷ் நடிக்கும் இட்லி கடை திரைப்படம், சிம்புவின் 49 வது திரைப்படம் என தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை நடிகர்களே இவர்கள்தான். இந்த மூன்று படங்களையும் தயாரிப்பது டான் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதனால் பராசக்தி மற்றும் இட்லி கடை போன்ற திரைப்படங்களின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது .இதற்கிடையில் சிம்பு அதிரடியான முடிவை எடுத்து இருக்கிறார். முதலில் பராசக்தி மற்றும் இட்லி கடை போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆகட்டும். அதன் பிறகு என்னுடைய படத்திற்காக நான் கால்சீட் தருகிறேன் எனக் கூறியிருக்கிறாராம். இதற்கு முன் அவருடைய 49வது படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடந்தது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவில்லையாம். அதுதான் இப்போது சிம்புவுக்கு பிளஸ் ஆக மாறி இருக்கிறது.

ஒருவேளை ஆரம்பித்து இருந்தால் கண்டிப்பாக டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து மீண்டும் அந்தப் படத்தை தொடங்கும் நிலையில் இருக்கும். அதற்கு சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதால் பராசக்தி மற்றும் இட்லி கடை திரைப்படங்கள் ரிலீஸ் ஆன பிறகு இந்த படத்திற்காக நான் கால்ஷீட் தருகிறேன். இதற்கிடையில் நான் வேறொரு படத்தில் நடித்துவிட்டு வருகிறேன் என கூறி இருக்கிறாராம் சிம்பு. ஒருவேளை தக் லைப் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்தினத்துடன் சிம்புவின் காம்போ தயாராகலாம் என தெரிகிறது .

அதுதான் சிம்புவின் 49வது படமாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிம்பு மற்றும் ருக்மணி வசந்த் இவர்களை வைத்து ஒரு காதல் படத்தை எடுப்பதாக மணிரத்தினம் கூறியிருப்பதாக தகவல் வெளிவந்தது .அந்த படத்தை லைக்கா அல்லது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் சிம்புவின் படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றன. இதில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரச்சினைகள் முடியும் வரை காத்திருந்தால் ரசிகர்களுக்கு அது ஒரு பெரிய ஏமாற்றமாக இருக்கலாம்.

simbu

simbu

அதனால் இப்படி ஒரு முடிவை சிம்பு எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது .ஏற்கனவே தக் லைஃப் திரைப்பட விழாவில் மணிரத்தினம் மற்றும் கமல் தனக்கு செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். அவர்களை நான் பெருமைப்படுத்துவேன். இனி அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என வாக்குறுதி கொடுத்திருந்தார் சிம்பு .அதனால் இனி எந்த இடைவெளியும் இல்லாமல் தன்னுடைய படங்கள் ரிலீஸ் ஆவதில் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார் என்று தெரிகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top