Categories: Cinema News latest news

இல்லாத ஒன்னுக்கு ஏன் இவ்ளோ அக்கப்போரு? சிம்பு – சிவகார்த்திகேயன் மேட்டரில் இதான் விஷயமா?

நேற்று ஒரே நாளில் சிம்பு தொடர்பான ஒரு செய்தி மிகவும் வைரலானது. அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்றெல்லாம் நேற்று செய்தி வெளியானது. சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட் பிரபு இயக்குவதாக இருந்தார். அந்தப் படம் இல்லை. சிம்புவின் 50 வது படமாக வெங்கட் பிரபு படமாகத்தான் இருக்கும் என்றும் பல செய்திகள் வெளியானது.

ஆனால் அப்படியெல்லாம் இல்லை. தன்னுடைய 50வது தேசிங்கு ராமசாமி படம்தான். அவர் அந்தப் படத்தை கங்காரு தன் குழந்தையை வயிற்றில் சுமப்பது போல சுமந்து கொண்டிருக்கிறார் என சிம்பு சொன்னதாக வலைப்பேச்சில் இன்று கூறியிருக்கிறார்கள்.ஆனால் வெங்கட் பிரபு சிம்பு கூட்டணி உறுதிதான். அது மாநாடு 2 படமாகத்தான் இருக்கப் போகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் மாநாடு 2 படம் குறித்த செய்தியே இப்போது தான் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அதற்குள் தயரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெயரில் மாநாடு 2 படத்திற்காக ஆடிசன் நடப்பதாக போலியாக ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருப்பதாக சுரேஷ் காமாட்சியே அதை தெளிவு படுத்தியிருக்கிறார். இது போல் எத்தனையோ போலி அக்கவுண்டில் இருந்து ஆடிசன் நடப்பதாக கூறி மோசடிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இது ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருப்பதால் வடசென்னை 2வாக இருக்குமா என்று எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் வடசென்னை படத்தின் சாயல் சிம்பு படத்தில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கான விருகம்பாக்கம் ஏரியாவில் வடசென்னை மாதிரியே செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்