Connect with us

Cinema News

இடியாப்ப சிக்கலா இருக்கும் போல.. வெற்றிமாறன்- சிம்பு படத்தில் என்னதான் நடக்குது?

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி:

சமீபகாலமாக வெற்றிமாறன் சிம்பு கூட்டணி பற்றிய செய்திதான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வெற்றிமாறன் சிம்பு இணையும் படம் கண்டிப்பாக வடசென்னை பார்ட் 2 ஆகத்தான் இருக்கும் என தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. அதை தனுஷிடம் வெற்றிமாறன் சொன்னதாகவும் அதற்கு தனுஷ் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்பட்டது. இதைப் பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் .

வடசென்னை பார்ட் 2 சாத்தியமா?

வடசென்னை பார்ட் 2 என்பது கண்டிப்பாக தனுஷ் தான் அதில் இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. வெற்றிமாறன் சிம்பு இணையும் திரைப்படம் வேறொரு கதையில்தான் உருவாகப் போகிறது .அது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகத் தான் உருவாகப் போகிறது. அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கப் போகிறாரா அல்லது கலை புலி தாணு தயாரிக்க போகிறாரா என்பதைப் பற்றிதான் ஒரு விவாதம் போய்க் கொண்டிருக்கின்றது .

இட்லிகடைதான் ஒரே குறிக்கோள்:

ஏற்கனவே ஐசரி கணேசுக்கும் சிம்புவுக்கம் இடையில் சில பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. தாணு தயாரிப்பில் சிம்பு நடிக்க எந்த தயக்கமும் காட்ட மாட்டார். அதனால் கூடிய சீக்கிரம் இந்த படத்தை பற்றிய ஒரு தெளிவான தகவல் இந்த மாத இறுதிக்குள் வெளியாகிவிடும் என தனஞ்செயன் கூறினார். இன்னொரு பக்கம் சிம்புவின் 49 ஆவது படத்தை இப்போதைக்கு டிராப் செய்து வைத்திருக்கிறார்கள். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஒரே குறிக்கோள் இட்லி கடை படத்தை அக்டோபர் ஒன்றாம் தேதி எப்படியாவது ரிலீஸ் செய்து விட வேண்டும் என்பதுதான் .

இவ்ளோ பட்ஜெட்டா?

இன்னொரு பக்கம் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட வேண்டும். ஏனெனில் இந்த இரண்டு படமே பெரிய படங்கள். பராசக்தி திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் 200 கோடியில் தயாராகிறது. இட்லிகடை படத்தை பொருத்தவரைக்கும் 130 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இடையில் சிம்பு படத்தை கையில் எடுத்தால் பட்ஜெட் என்பது இன்னும் அதிகமாகவே போகும்.

சிம்புவின் முடிவு:

அதனால் டான் பிக்சர்ஸ் நிறுவனம் முதலில் இந்த இரு படங்களை முடித்து விட வேண்டும் என இருக்கிறார்கள். இதற்கு சிம்புவும் அவருடைய ஆதரவை தந்திருக்கிறார். இதற்கிடையில் நான் வேறு ஒரு பெரிய படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என சிம்புவும் சொல்லி இருக்கிறார். ஜூலை மாதத்தில் ஆரம்பித்து இந்த வருடத்திற்குள் ஒரு படத்தை முடித்து விட வேண்டும். அடுத்த வருடம் கண்டிப்பாக இரண்டு படங்களில் நடிக்க வேண்டும் என சிம்பு ஒரே முடிவோடு இருக்கிறார் என தனஞ்செயன் கூறி இருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top