Cinema News
தனுஷிடம் என்ஓசி வாங்கும் வெற்றிமாறன்! சிம்பு படத்தில் நீடிக்கும் குழப்பம்..
சிம்பு வெற்றிமாறன் கூட்டணி குறித்துதான் தற்போது சோசியல் மீடியாக்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. தக் லைஃப் படத்தை முடித்த கையோடு சிம்பு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. அந்தப் படத்தில் மீண்டும் சந்தானம் நடிப்பதாகவும் இருந்தது.
அது சம்பந்தமான புகைப்படங்களும் வைரலானது. ஏன் படத்தின் பூஜை கூட கோலாகலமாக போடப்பட்டது. ஆனால் டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஐடி ரெய்டில் சிக்க சிம்புவின் அந்தப் படம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு வழியாக டான் பிக்சர்ஸ் நிறுவனமும் அந்த பிரச்சினையில் இருந்து விடுபட இட்லி கடை படத்தை எப்படியாவது முதலில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முயற்சியில்தான் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
அதனால் சிம்பு இதன் இடைப்பட்ட காலத்தில் வேறொரு படத்தில் நடித்து விட்டு வருகிறேன் என வெற்றிமாறனுடன் சேர்ந்திருக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகி விட்டது. முதலில் வெற்றிமாறன் தனுஷை வைத்து எடுப்பதாக இருந்த வடசென்னை 2 படத்தைத்தான் சிம்புவை வைத்து எடுக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது வேறொரு கேங்ஸ்டர் படமாகத்தான் உருவாகப்போகிறது.
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை 2 படம் ஏற்கனவே தாணு தயாரிப்பில் அக்ரிமெண்ட் முடிந்துவிட்டது. ஆனால் இப்போது வந்த தகவலின் படி சிம்புவை வைத்து விருகம்பாக்கம் ஏரியாவில் வடசென்னையில் உள்ளது போல் செட் போட்டு படமாக்கி வருகிறார்களாம். அதனால் இது வடசென்னை 2வாகத்தான் இருக்குமா என்றும் சந்தேகம் எழும்புகிறது.
ஆனால் உண்மையிலேயே வடசென்னை படத்தின் சாயல் இந்தப் படத்தில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் எதற்கும் தனுஷிடம் ஒரு என். ஓ. சி வாங்கி வைத்துவிடுவோம் என வெற்றிமாறன் தனுஷை பார்க்க மும்பை போகப்போகிறாராம். அதனால் சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகப் போகும் படம் வடசென்னை படத்தை தழுவித்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.