Connect with us

Cinema News

சிங்கப்பெண்ணே: வார்டனைக் கையெடுத்துக் கும்பிட்ட ஆனந்தி… லலிதாவிடம் துளசி சொன்ன உண்மை!

சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் இன்று விறுவிறுப்பாகப் போகிறது. இந்தத் தொடரில் இன்று நடந்த எபிசோடின் கதைச்சுருக்கத்தைப் பார்ப்போம். ஆனந்தியின் கோபத்தைக் குறைத்து ஆறுதல் சொல்கிறாள். வாழ்க்கையே அழிஞ்சிப் போச்சு. அதுக்கான காரணம் யாருன்னு அந்த அயோக்கியனை ஒரு தடவையாவது பார்த்தே ஆகணும்னு கங்கணம் கட்டுகிறாள் ஆனந்தி. அந்த வேளையில் மகேஷ் ஆனந்தியைத் தேடி ஆஸ்டலுக்கு வருகிறான்.

அப்படி நீங்க எங்க தான் போயிட்டு வர்றீங்க? சௌந்தர்யா சொல்லுன்னு மகேஷ் கேட்கிறான். அதற்கு ஆஸ்டல் வார்டன் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாள். அதைப் பார்த்ததும் ஆனந்தி வார்டனைக் கையெடுத்துக் கும்பிடுகிறாள்.

மகேஷிடம் ஆனந்தி ஒரு வேண்டுகோள் வைக்கிறாள். அக்காவுக்கு நாளைக்கு கல்யாணத்துக்கான முகூர்த்தக் கால் நட்டுறாங்க. அதனால நாளையில இருந்து லீவு வேணும்னு கேட்கிறாள். சரின்னு சம்மதிக்கிறான் மகேஷ். பணம் ஏதாவது வேணுமான்னு மகேஷ் கேட்க, வேண்டாம் சார். ஏற்கனவே நீங்க நிறைய செஞ்சிட்டீங்க. இனியும் வேணாம்.

நான் பார்த்துக்கறேன் சார்னு ஆனந்தி சொல்லிவிடுகிறாள். யாரு உன்னை ஊருக்குக் கூட்டிட்டுப் போறான்னு மகேஷ ஆனந்தியிடம் கேட்க நான் தனியாகத்தான் போறேன்னு ஆனந்தி சொல்கிறாள். அதைக் கேட்டதும் மகேஷ் அதற்கு ஒத்துக்கொள்ள முடியாது. சௌந்தர்யா உனக்கு லீவு தாரேன். நீ போய் பத்திரமா விட்டுட்டு வான்னு சொல்கிறான் மகேஷ்.

இந்த நிலையில் அன்புவும், துளசியும் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கு அன்புவின் அம்மா ஐயரை வரவழைத்து அன்பு, துளசி திருமண நிச்சயதார்த்தத்துக்கு நாள் பார்க்கிறார். அன்புவோ அதுக்கு மறுக்கிறான். அதற்கு அன்புவின் அம்மா லலிதா கல்யாண வீட்ல சீப்பை மறைச்சி வச்சிடடா கல்யாணமே நின்றுடும். அந்த மாதிரி ஐயர் நாள் குறிக்காமப் போயிட்டாருன்னு கனவு காணாதேன்னு சொல்கிறாள்.

ஆனந்திக்கே ஆதரவாகப் பேசுகிறான். ஆனந்திக்குக் கொஞ்சம் கூட அன்பு மேல பாசமே இல்ல. இனியும் அவள் எனக்கு மருமகங்கற எண்ணம் எனக்கு இல்லைன்னு அன்புவின் அம்மா லலிதா சொல்கிறாள். அன்பு மேல ஆனந்திக்கு அன்பு நிறைய இருக்கு. அன்பு கையில சுடுதண்ணிக் கொட்டிட்டான்னதும் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிருக்கான்னு தெரிஞ்சதும் ஆனந்தி தவிச்ச உண்மையான தவிப்பை நான் பார்த்திருக்கேன்.

அவள் அழுகையும், அந்த தவிப்பும் பக்கத்துல இருந்து பார்த்த எனக்குத்தான் தெரியும். அப்புறம் ஏன் ஆஸ்பிட்டல்ல தலையில அடிப்பட்டு இருக்கும்போது பார்க்க வரலன்னு கேட்கிறாள் அன்புவின் அம்மா. அப்போது துளசி அத்தை உங்ககிட்ட ஒரு உண்மையை நான் சொல்லணும்னு சொல்கிறாள். அன்னைக்கு ஆஸ்பிட்டல்ல அன்பு குணமாகணும்னு ஆத்மார்த்தமா நெற்றியில விபூதி பூசி விட்டது ஆனந்திதான்னு சொல்கிறாள். அதைக் கேட்ட அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சி. அடுத்து என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top