Connect with us

Cinema News

சிவாஜி வீடு ஜப்திக்கு காரணம் விக்ரம் பிரபுவா? துஷ்யந்தா?

சிவாஜியின் வீடு ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு போட்ட செய்திதான் இப்போது எங்கு பார்த்தாலும் வருகிறது. சிவாஜி புரொடக்ஷன் படங்கள் தொடர்ந்து தோல்வி அடையும்போது சந்திரமுகி படத்தில் ரஜினி தான் நடித்து ஒரு முறை இதே போல வீட்டுக்கு சோதனை வந்தபோது காப்பாற்றினார் என்கிறார்கள்.

வட்டிக்கு மேல் வட்டி: அதே போல ராம்குமாரும் தன் மகனின் பெயரில் பல படங்கள் எடுத்து கடன் வாங்கி அது வட்டிக்கு மேல் வட்டி என்றும் அதனால்தான் இந்த நிலைமை என்றும் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு படம் ஒன்றால்தான் இப்படி ஒரு நிலை என்கிறார்கள். எது உண்மை? வாங்க பார்க்கலாம். அந்த வகையில் டாக்டர் காந்தாராஜ் சிவாஜி வீடு ஜப்தி குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

கூட்டுக்குடும்பம்: சிவாஜி வாழ்ந்த வீட்டுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆக்சுவலா கணக்குக் காட்டுறதுக்காக இப்படி ஒரு செய்தி வந்திருக்கலாம். அண்ணன் குடும்பம், தம்பி குடும்பம் என இரண்டும் அங்கிருந்தது. கூட்டுக்குடும்பம். மதியம் சாப்பாட்டுக்கு 30 பேருக்குக் குறையாம இருப்பாங்க. கல்யாணப் பந்தி மாதிரி நடக்கும்.

300 கோடி: அன்னை இல்லத்துக்கு நான் பெட்ரூம்ல இருந்து அவ்ளோ இடத்தையும் பார்த்துருக்கேன். அப்படிப்பட்ட வீடு ஏதோ ஒரு காரணத்துக்காக செய்தியாக வந்திருக்கு. அதன் மதிப்பு 300 கோடிக்கு மேல போகும். பிரிச்சி வித்தாங்கன்னா மாத வாடகையே 15 கோடி வரை போகும். இது அரசியல் சூழ்ச்சி அல்ல. எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்ட வறட்சி.

விக்ரம் பிரபு – துஷ்யந்த்: சிவாஜியின் அடுத்த தலைமுறை 2வது தலைமுறை வரணும்னு துஷ்யந்த்தைப் போட்டாங்க. அவரு ராம்குமாரின் மகன். படம் எடுபடல. ரெண்டு மூணு படத்துல நடிச்சாரு. அதே சமயத்துல பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிச்சாரு. அவரு எடுபட்டுட்டார்.

அவரும் ரெண்டு மூணு படத்துக்குத் தான் வந்தாரு. இவங்க துரதிர்ஷ்டம் என்னன்னா இன்னைக்கு சினிமா உலகம் போயிடுச்சு என்கிறார் டாக்டர் காந்தாராஜ். பிரச்சனையே விக்ரம் பிரபுவான்னு ஆங்கர் கேட்கிறார். அவரும் இயக்குனர் எழில் எடுத்த இன்னொரு படம் வந்துருக்காம். அந்தப் படம் ரொம்ப நாளா கிடப்பில இருக்கு.

அந்தப் படத்துக்குத்தான் மூன்றரை கோடி வாங்கினதாகவும் அது வட்டிக்கு வட்டியாக குட்டிப் போட்டு 9கோடிக்கு மேல நிக்கிறதாகவும் சொல்றாங்கன்னு கேட்கிறார். அதற்கு காந்தாராஜ் இப்படி பதில் சொல்கிறார்.

அட்வான்ஸ் தொகை: யாருமே முதல் வச்சிக்கிட்டு சினிமா எடுக்குறது இல்ல. சினிமா பூஜையில என்னன்னா 2500 அடிக்கு படம் எடுத்திருப்பாங்க. அதை பூஜையின்போது விநியோகஸ்தருக்குப் போட்டுக் காட்டுவாங்க. பார்த்துட்டு அவங்களுக்கு நம்பிக்கை வந்தா ஏரியாவை எடுத்துக்குறேன்னு சொல்வாங்க. அதுக்கான அட்வான்ஸ் தொகையைக் கொடுப்பாங்க. அதை வச்சித்தான் மீதி படத்தை ரொட்டேஷன் பண்ணி எடுப்பாங்க.

சிவாஜி அரசியல் கட்சி சொந்தமா ஆரம்பிச்சதுலதான் ரொம்ப நஷ்டம்னு சொல்றாங்க. அவருடைய பொருளாதாரம் அடிபட்டது அந்த விஷயத்துலதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top