Sivakarthikeyan: தமிழ்சினிமாவில் தற்போது முக்கிய இடத்தில் சிவகார்த்திகேயன் இருந்தாலும் அவருக்கு அந்த இடத்தினை பெற்று கொடுத்ததுக்கு காரணம் நடிகர் தனுஷ் என்பதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் டைட்டில் வின்னராக வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதே டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பல ஆண்டுகள் இருந்தார். அப்போதே அவருக்கு நிறைய ரசிகர்கள் இருந்தனர்.
அதை தொடர்ந்து அவர் 3 திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு எண்ட்ரி கொடுத்தார். ஆனால் ஒரு படத்தில் மட்டுமே சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், அவருக்கு கிடைத்தது எல்லாமே ஹீரோக்கள் வேடம்தான். மெரீனா, மனம் கொத்தி பறவை படங்களில் ஹீரோவாக நடித்தாலும், எஸ்கேவிற்கு வெற்றி படமாக அமைந்தது எதிர்நீச்சல் திரைப்படம் மட்டுமே. இதை நடிகர் தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார்.
படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற சிவகார்த்திகேயனுக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தது. இதில் கிராமத்தை மையமாக வைத்து ரிலீஸான எல்லா படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
பல வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் தனுஷிற்கு சமமான இடத்தில் கோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். கொட்டுக்காளி பட விழாவில் இயக்குனர் எஸ்கே குறித்து பெருமையாக பேசி இருப்பார்.
அதற்கு சிவகார்த்திகேயன் நான் யாரையும் தேடி வாய்ப்பு கொடுத்தேன் எனச் சொல்லிக்கொண்டு இருக்க மாட்டேன். என்னை அப்படி சொல்லி பழக்கி விட்டார்கள் எனப் பேசி இருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது.
இதை வைத்து எஸ்கே ரசிகர்கள் தனுஷை விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் எந்த இடத்தில் தனுஷ் குறித்து அவதூறாக பேசியதே இல்லை. சமீபத்தில் கூட தயாரிப்பாளர் திருமண விழாவில் இருவரும் கட்டியணைத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில், நான் சின்னத்திரையில் இருந்த போது என்னை அழைத்து 3 படத்தில் உங்களுக்கு ஒரு ரோல் இருக்கிறது எனக் கூறி வாய்ப்பளித்தார்.
படம் ரிலீஸான பிறகு என் நடிப்பை பார்த்து ரொம்பவே பாராட்டினார். நான் சின்ன ரோல் கொடுத்து தப்பு செய்துவிட்டேன். இப்படி பண்ணி இருக்கக்கூடாது. என்னுடைய கம்பெனியில் நீங்கள் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறி எதிர்நீச்சல் பட வாய்ப்பை வழங்கினார் எனக் குறிப்பிட்ட விஷயமும் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read: கண்ணதாசனை வம்பிழுத்த எம்எஸ்வி… போட்டாரே ஒரு போடு அந்தப் பாட்டால…!
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…