விஜய் டிவியின் கலக்கப்போவது யார் நிகழ்ச்சி மூலம்தான் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் அறிமுகமானார். ஆனால், அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் ரோபோ ஷங்கர் கொடுத்த ஷாக் சிவகார்த்திகேயனை அதிர்ச்சியடையச் செய்ததாம்.
திருச்சியில் கல்லூரி படிக்கும்போது தனக்குள் இருந்த மிமிக்ரி கலைஞனை சிவகார்த்திகேயன் அடையாளம் கண்டுகொண்டார். அப்போது, விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மெதுவாக பிரபலமடையத் தொடங்கியது. சிவாவின் காமெடியையும் மிமிக்ரி திறமையையும் பார்த்து, அந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் கலந்துகொள்ளுமாறு அவரின் நண்பர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
ஒருவழியாக அந்த நிகழ்ச்சியின் ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வான அவர், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் மிளிர்ந்தார். அதன்பின், தொடர்ச்சியாக விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்தும் வழங்கினார். குறிப்பாக, அவரின் அது இது எது நிகழ்ச்சியின் எபிசோடுகள் இப்போதுவரை எவர்கிரீன் காமெடியாக இருக்கிறது.
அதன்பின், 2012-ம் ஆண்டு மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ச்சியாக வெள்ளித்திரையில் வெற்றிகரமான நாயகனானார். அடுத்தடுத்த படங்கள் மூலம் தமிழ் திரையுலகின் தவிர்க்கமுடியாத ஹீரோவாகியிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்குத் தேர்வான நாட்களில் இவரின் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரோபோ சங்கர் கலந்துகொண்டாராம்.
அப்போது, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தேர்வாகியிருந்த இவரை ரோபோ சங்கரிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதைப்பற்றியெல்லாம் எதுவும் யோசிக்காத ரோபோ சங்கர், `அந்த ஷூட்டிங்தான் முடிஞ்சே போச்சே… இதுல இவர் எப்போ கலந்துக்கிற போறாரு’ என்று போகிற போக்கில் ஒரு கமெண்ட் அடித்துவிட்டு போனாராம்.
இதைக்கேட்டு கதிகலங்கிப் போன சிவகார்த்திகேயன் இரண்டு நாட்கள் என்ன செய்வதன்றே தெரியாமல் கலங்கிப் போனாராம். பின்னர் ஒருவழியாக தைரியத்தை வரவைத்துக் கொண்டு கலக்கப்போவது யார் இயக்குநர் தாம்ஸனுக்கு போன் செய்து விசாரித்தபோது, அடுத்த எபிசோடு ஷூட்டுக்கு நிச்சயம் அழைப்பு வரும் என்று சொல்லி சமாதானப்படுத்தினாராம். அதன்பிறகே சிவகார்த்திகேயன் நிம்மதியடைந்திருக்கிறார். இதை சில பேட்டிகளில் குறிப்பிட்டு ரோபோ சங்கரை ஓட்டவும் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…