சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராசஸி மற்றும் பராசக்தி படங்களை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்ற போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது சிவகார்த்திக்கேயன் வேறு ஒரு சூப்பர் இயக்குனருடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் மதராஸி படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், தனது 25வது படமான பராசக்தி படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வருகிறார். கோட் படத்தில் கேமியோவாக நடித்த நிலையில், வெங்கட் பிரபு மற்றும் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும், மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், தற்போது கதையே மாறிவிட்டது என்கின்றனர்.
சிவகார்த்திகேயன் தற்போது குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகருடன் ஒரு புது படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார் எனக் கூறப்படுகிறது. குட் நைட் படம் சிம்பிலாக இருந்தாலும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது அதே போல் சிவகார்த்திகேயனுடன் வினய் சந்திரசேகர் இணையும் காம்போ வொர்கவுட்டாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிம்புவை போல திடீரென சிவகார்த்திகேயனும் இயக்குநரை மாற்றிவிட்டாரே என கோலிவுட்டில் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இருந்தாலும், குட் நைட் பட இயக்குனருடனான படம் சில மாதங்களில் நிறைவடைந்த பின்னர், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மறைந்த விவசாய ஆர்வலர் நெல் ஜெயராமனின் மகனின் கல்விச் செலவை ஏற்பதாக 2018ல் உறுதியளித்த சிவகார்த்திகேயன், கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த உதவியைச் செய்து வருவதாக இரா.சரவணன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரின் நம்பிக்கையான குணத்திற்கும் நல்ல மனதிற்கும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…