Connect with us

Cinema News

கெடுவான் கேடு நினைப்பான்.. விஜய்க்கு எதிரான சதி! SKவுக்கே ஆப்பா முடியும்னு நினைக்கல

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் மீது ஒரு பார்வை இருக்கிறது. அதுவும் அஞ்சாமை திராவிட உடைமையடா.. ஜனவரி மாதம் ரிலீஸ் என சொல்லிவிட்டார்கள். ஜனநாயகன் திரைப்படமும் வருகிறது. இதில் ஒரு பக்கம் அரசியல் ரீதியாக யோசித்துப் பார்த்தால் யார் பகடைக்காய் என்ற ஒரு கேள்வி வருகிறது. சிவகார்த்திகேயன் பகடைக்காயா? இல்லை விஜய் ஏமாந்து போய் துப்பாக்கி கொடுத்து விட்டாரா இந்த இரண்டு கேள்விகள் எழுகிறது. இதைப் பற்றி வலைப்பேச்சு பிஸ்மி அவருடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் இதில் பகடைக்காய் கிடையாது. அப்படி நினைத்தால் நாம் எல்லோரும் முட்டாள் .சிவகார்த்திகேயன் பயங்கரமான காரியவாதி. அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. முக்கியமாக கோட் படத்தில் அவர் கையில் துப்பாக்கியை கொடுத்ததன் மூலமாக என்னுடைய இடத்தை நீதான் நிரப்புற என்ற ஒரு மறைமுக செய்தியை விஜய் மக்களிடையே கொண்டு போய் சேர்த்தவர்.

தெரியாமல் கொடுக்கவில்லை. அவர் தெரிந்தே தான் கொடுத்திருக்கிறார். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன்மீது அவருக்கு இருந்த நம்பிக்கையும் அன்பும் இதுதான் காரணம். ஆனால் அதே சிவகார்த்திகேயன் தன்னை பகடை காயாக அல்லது தன்னுடைய படத்தை வைத்து விஜயின் படத்தை காலி பண்ணனும் அல்லது விஜயை காலி பண்ணனும் என்று எண்ணும் திமுக மேலிடம் முடிவு பண்ணும் போது அவர் என்ன பண்ணி இருக்க வேண்டும்?

இந்த படத்தை வைத்து அதை பண்ணாதீர்கள். என் படத்தை வைத்து பண்ணாதீர்கள். ஏனெனில் விஜய் சாருக்கு என் மேல் அதிக அன்பு நம்பிக்கை கொண்டிருக்கிறார் .நான் அவருக்கு கெட்டவனாக இருக்கக் கூடாது என்ற அந்த முயற்சியை முதல் புள்ளியிலேயே நிறுத்தி இருக்க வேண்டும் .சிவகார்த்திகேயன் நினைத்திருந்தால் அது முடியும். ஆனால் சிவகார்த்திகேயன் என்ன பண்ணார் என்றால் ஆஹா விஜயை சிவகார்த்திகேயன் முந்திட்டார் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு அறிய வாய்ப்பு .இறுதி வாய்ப்பு இதுதான்.

sivakarthikeyan

sivakarthikeyan

அதனால் இதை பயன்படுத்தி ஜனநாயகன் படத்தை விட பராசக்தி வெற்றி படம் என்பதை காட்டுவதற்கு இதுதான் ஒரே வழி. இதை சதியாக கூட நாம் பயன்படுத்தலாம் .இந்த சதி திட்டத்திற்கு அவர் உடந்தையாக இருந்திருக்கிறார் .ஆனால் ஒரு பழமொழி இருக்கிறது. கெடுவான் கேடு நினைப்பான். அது சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடந்திருக்கிறது .நீங்கள் பராசக்தி படத்தை வைத்து விஜய்யை அடிக்கணும்னு நினைத்தீர்கள். ஆனால் விதி உங்க பராசக்தியையே காலி பண்ணி விட்டது என பிஸ்மி கூறி இருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top