காமெடியனாக இருந்து கதாநாயகர்களாக பலர் வந்துள்ளனர். கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம் என பலர் வந்தாலும் அவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக வந்தவர் தான் சூரி. யாருமே எதிர்பாராத சூழலில் ஆக்ஷன் ஹீரோவாக வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் உருவெடுத்தார். முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பு.
இப்படியே நடிங்க. இதுதான் உங்களுக்கு பொருந்தும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் அவருக்கு மாமன் என்ற படம் வெளியானது. அதே நேரம் சந்தானத்துக்கு டிடி நெக்ஸ் லெவல் என்ற படமும், யோகிபாபுவுக்கு ஜோரா கையைத் தட்டுங்க என்ற படமும் வெளியானது.
ஆனால் இந்த படங்களில் சூரி படம் தனித்து நிற்கிறது. வசூலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது. படம் முழுவதும் சென்டிமென்ட் டச்., கண்ணைக் கசக்க வச்சிட்டாங்க அப்படி இப்படின்னு சொன்னாலும் சூரி தன் அட்டகாசமான நடிப்பால் படம் முழுவதையும் தாங்கிப் பிடித்துள்ளார். இந்தப் படத்துக்காக மதுரையில் மண்சோறு தின்றார்கள் ரசிகர்கள்.
அவர்களுக்கும் உடனடியாக அட்வைஸ் பண்ணினார். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் என் ரசிகர்களாக இருக்கத் தகுதியில்லை. குடும்பத்தைப் பாருங்கள் என்றார். இவரைப் பற்றிய ஒரு தகவல் இப்போது ஆச்சரியப்படுத்துகிறது. என்னன்னு பாருங்க.
நடனக் கலைஞர் பஞ்சமி நாயகி மற்றும் மணிகண்டன் தம்பதியரின் 3 மகன்களின் காதணி விழாவிற்கு மாமனாக வந்து சீர்வரிசை செய்தார் நடிகர் சூரி. சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சூரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அவரிடம் தன் மகன்களுக்கு இன்னும் மொட்டை அடித்துக் காது குத்தவில்லை என டான்ஸர் பஞ்சமி தனது ஆதங்கத்தை சொன்னார். அதைத் தொடர்ந்து நான் உங்கள் பிள்ளைகளுக்கு மாமனாக இருந்து காதணி விழாவை நடத்தி வைக்கிறேன் என்று சூரி சொல்லி இருந்தார். அதைத் தற்போது நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Karur Vijay:…
கரூரில் நடந்த…
Karur: நடிகர்…
Ajith: தமிழ்…
TVK Vijay:…