தமிழ் சினிமாவில் இன்று ஒரு மாபெரும் ஆளுமையாக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் .பெங்களூரில் இருந்து வந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் இவர்தான் இன்று ராஜாவாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் இவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருந்தன .ஆனால் தன்னுடைய படங்களின் மூலமாக அதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார் ரஜினி. இன்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் இவர் மீது பேரன்பை பொழிந்து வருகின்றனர்.
இவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக தலைவராக்கி உட்கார வைத்திருப்பார்கள் தமிழ் மக்கள். அந்த அளவுக்கு ரஜினி மீது ஆழமான அன்பையும் மரியாதையும் வைத்திருக்கின்றனர். ரஜினியின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவர் வீட்டில் இல்லை என்றாலும் நூற்றுக்கணக்கான பேர் அவர் வீட்டின் முன் நின்று கோஷங்களை எழுப்பி அவரை எப்படியாவது பார்த்துவிட்டு போக வேண்டும் என காத்திருப்பதை நாம் ஒவ்வொரு வருடமும் பார்த்து வருகிறோம்.
இன்று இவருடைய படங்கள் தான் மாஸ் ஓப்பனிங்காக இருந்து வருகிறது .வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. 73 வயதாக இருந்தாலும் மற்ற இளம் தலைமுறை நடிகர்களுடன் போட்டி போடும் அளவுக்கு அதே தெம்புடனும் அவருடைய ஸ்டைலில் கொஞ்சம் கூட எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே இருக்கிறார் ரஜினி .இந்த நிலையில் ரஜினியின் ஒரு படத்தை இயக்க மறுத்த இயக்குனர் பற்றி தான் இப்போது சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகின்றன.
விசு திரைக்கதையில் அமைந்த ஒரு கதை தான் நெற்றிக்கண் .அந்த கதையைக் கேட்டதும் கே. பாலச்சந்தர் எஸ் பி முத்துராமனை வைத்து இந்த படத்தை ரஜினியை நடிக்க வைத்து எடுத்து விடலாம் என்று நினைத்திருக்கிறார் .இந்த படம் வெளியாவதற்கு முன்பு வரை அனைத்து படங்களிலும் ஒரு அப்பா தன்னுடைய மகனை திருத்துவது மாதிரியான படங்கள் தான் வந்திருக்கின்றன.
spm
ஆனால் நெற்றிக்கண் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அப்பா கேரக்டர் பெண் பித்தராக நடித்திருப்பார். மகன் கேரக்டர் தான் அப்பாவை திருத்துவது மாதிரி இந்த படத்தில் காட்சிகள் இருக்கும். அதனால் முத்துராமன் ரஜினியை பெண் பித்தராக காட்டுவதாக இருந்தால் என்னால் அந்த படத்தை இயக்க முடியாது எனக் கூறினாராம். ஆனால் ரஜினி இந்த படத்தின் கதையை கேட்டதும் எத்தனை நாள் தான் நல்லவனாகவே நடிக்கிறது என இந்த படத்திற்கு உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம். அதன் பிறகு எஸ்.பி. முத்துராமனை எப்படியோ சம்மதிக்க வைத்து அந்த படத்தை எடுத்திருக்கிறார் கே பாலச்சந்தர்.
Vijay TVK:…
SAC: சினிமாவிலும்…
Devara 2:…
Kaithi 2:…
வடிவேலு ஒரு…