கன்னட மொழி குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கிய கமலின் தக் லைஃப் படத்தைக் கர்நாடகாவில் புறக்கணித்தனர். அதனால் ரிலீஸ் ஆகவில்லை. அப்போது அங்குள்ள நீதிபதிகள் கமலை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால் மறுத்தார் கமல். நான் சொன்னதில் தவறு இல்லை என்றார். அவர் எடுத்துக்கொண்ட கொள்கைக்கு இப்போது சுப்ரீம் கோர்ட் கொடுத்துள்ள தீர்ப்பு சாதகமாக அமைந்துள்ளது.
சென்சார் போர்டு மூலம் தணிக்கை செய்யப்பட்ட படத்தை எந்த இடத்திலும் ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு சொல்ல உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இனி ரிலீஸ் பண்ணினால் கமலுக்கு எந்த பலனும் இல்லை. அதே நேரம் அவரது கொள்கைரீதியாக இது ஒரு நல்ல பலனைத் தந்துள்ளது.
ஏற்கனவே கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகள் மன்னிப்பு கேட்டு கெடு விதித்தார்கள். அப்படி மன்னிப்பு கேட்டால் கர்நாடகாவில் படத்தைத் திரையிட அனுமதிக்கிறோம் என்றும் கண்டிஷன் போட்டது. அதுவும் நீதிபதியே இப்படி சொல்வது அனைவருக்கும் பேசுபொருளானது. அப்போது கமல் உறுதியாக அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது. நான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள்.
அதற்காக வருந்துகிறேன் என்று தெளிவாக சொல்லி விட்டார். இப்போது எம்பி. சீட் வாங்கி உள்ளார். அவரது கெத்தை எப்படி விட்டுக் கொடுத்து மன்னிப்புக் கேட்பார். அவர் மீது தவறு இருந்தால் கேட்கலாம். எந்த தவறும் இல்லையே. சுப்ரீம் கோர்ட் ஆர்டர் கமலுக்கு ஒரு மாரல் வெற்றி. இப்போது கர்நாடகாவில் 2 வாரம் கழித்து ரிலீஸ் ஆனால் பெரிய வசூல் எதுவும் பண்ணப் போறது இல்லை.
கமலுக்கு தக் லைஃப் படத்துல சம்பளம் வராதுன்னு தான் பேசுறாங்க. ராஜ்கமல் பிலிம்ஸ்ல இருந்து பர்ஸ்ட் காபிக்கு மணி சாருக்கு ஒரு தொகை கொடுத்துருக்காங்க. கமல் ரெண்டு வருஷம் உழைச்ச உழைப்புக்கு ஒண்ணுமே இல்ல. 11 நாளா ஆகியும் படத்தின் வசூல் 50கோடியைத் தான் நெருங்கியுள்ளது. ஆனாலும் சுப்ரீம் கோர்ட் ஆர்டர் கமலுக்கு ஒரு தெம்பைத் தந்துள்ளது என்றே சொல்லலாம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…