செம ஸ்டைலா இருக்காரே சூர்யா!.. புது படம் ஸ்டார்ட்!.. போஸ்டரே சும்மா அள்ளுதே!...

 
செம ஸ்டைலா இருக்காரே சூர்யா!.. புது படம் ஸ்டார்ட்!.. போஸ்டரே சும்மா அள்ளுதே!...

Suriya 46: எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் என போராடிக்கொண்டிருப்பவர்களில் சூர்யா முக்கியமானவர். சிங்கம் 2-வுக்கு பின் இவருக்கு ஹிட் படம் எதுவும் அமையவில்லை. அதேநேரம் ஓடிடியில் வெளியான ஜெய் பீம், சூரரைப்போற்று ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.

அதேநேரம் தியேடரில் வெளியான எதற்கும் துணிந்தவன், காப்பான் போன்ற படங்கள் வெற்றியை பெறவில்லை. சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து அவரின் இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார் சூர்யா. இது ஒரு சரித்திர படமாகும். இந்த படத்திற்காக சூர்யா கடுமையான உழைப்பை கொட்டியிருந்தார்.

செம ஸ்டைலா இருக்காரே சூர்யா!.. புது படம் ஸ்டார்ட்!.. போஸ்டரே சும்மா அள்ளுதே!...

கொடைக்கானல் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. ஹாலிவுட் ஸ்டைலில் மேக்கிங் இருந்தது. ஆனால், என்ன காரணமோ இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றே சொல்லப்பட்டது. இந்த படத்திற்கு எதிரான விமர்சன வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி படத்தின் வசூலையே பாதித்தது.

இந்த படம் இரண்டாயிடம் கோடியை வசூல் பண்ணும் என இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஊடகங்களில் கொடுத்த பேட்டியும் ட்ரோலில் சிக்கியது. கங்குவா தோல்விக்கு பின் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் வெளியானது. இந்த படம் தோல்வி அடையவில்லை என்றாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையவிருக்கிறது. இந்த படத்திற்கு வேட்டை கருப்பு என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


இந்நிலையில், லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று துவங்கவுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு ஒரு புதிய போஸ்டரோடு அறிவித்திருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்படவுள்ளது. இது சூர்யாவின் 46வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web