Connect with us

Cinema News

சூர்யா -ஆர்ஜே பாலாஜி படத்தின் தலைப்பு இதுதானாம்! பில்டப்பை ஆரம்பிச்சுட்டாங்க

சூர்யா:

ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்போது வரை இந்த படத்திற்கு தலைப்பு வேட்டை கருப்பு என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க சாய் அபயங்கர் இசை அமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். முதலில் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

ரஹ்மான் விலகல்:

அதை பற்றி அதிகாரப்பூர்வ தகவலும் வெளியான நிலையில் திடீரென படத்தில் இருந்து ஏ ஆர் ரகுமான் விலகி விட்டதாக தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து சாய் அபயங்கர் இந்த படத்தில் இசையமைப்பாளராக கமிட் ஆகி இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தன.

படத்தின் தலைப்பு:

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து லப்பர் பந்து நடிகை சுவாசிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வரும் இருபதாம் தேதி ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாள் என்பதால் இந்த படத்தை பற்றிய அப்டேட் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது .அது என்ன அப்டேட் எனில் படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்களாம்.

சிங்கம் போன்ற கதை:

அதோடு படத்தின் டீசரையும் வெளியிட இருக்கிறார்களாம். இந்த நிலையில் வேட்டை கருப்பு என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் படத்தின் தலைப்பு கருப்பு என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல கங்குவா, ரெட்ரோ இந்த படத்தின் தோல்விகளை எல்லாம் இந்த படம் மறக்கடிக்கும். சிங்கம் படத்திற்குப் பிறகு அப்படிப்பட்ட ஒரு கதையில் சூர்யா இன்னும் நடிக்கவில்லை .அது மாதிரியான கதையாக தான் இந்த படம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

surya

surya

ஓவர் பில்டப்:

படத்தில் சூர்யா வக்கில் கதாபாத்திரத்திலும் ஆன்மீகவாதியாக இன்னொரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படித்தான் கங்குவா படத்திற்கு பிறகு ரெட்ரோ திரைப்படத்தைப் பற்றியும் ஓவர் பில்டப் செய்து வந்தார்கள். கடைசியில் அந்த படத்தின் நிலைமை என்ன ஆனது என அனைவருக்கும் தெரியும். இப்போது இந்த படத்தை பற்றியும் இப்போதிலிருந்தே ஹைப் ஏற்றி வருகிறார்கள். இது எப்படிப்பட்ட கதையாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top