Cinema News
ரெட்ரோவிலும் பஞ்சாயத்தா? அடம்பிடித்த சூர்யா.. புறநானூறு விட்டு போனது நியாபகம் இல்லையா?
புறநானூறு டீசர் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ,ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் புறநானூறு. அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா .படத்தின் கதை எல்லாம் கேட்டு சம்மதம் தெரிவித்த பிறகு அந்த கதையில் தனக்கு ஈடுபாடு இல்லை என்று சூர்யா விலகிக் கொண்டார்.
குறிப்பாக அந்த படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி உருவாகும் திரைப்படம் என்பதால் அது தனக்கு சரி வராது என்ற காரணத்தினால் சூர்யா விலகினார் என்ற ஒரு செய்தி பரவியது .அதன் பிறகு தான் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்குள் நுழைந்தார். அதோடு ஜெயம் ரவி வில்லனாகவும் அதர்வா ஸ்ரீ லீலா என ஒரு புது காம்பினேஷனில் படம் தயாராகி வருகிறது .
படத்தின் டீசர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அதனால் சூர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தை மிஸ் பண்ணிட்டியே தலைவா என சூர்யாவை டேக் செய்து கமெண்ட்களை தட்டி விட்டனர். இந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் தான் இந்த படம்.
மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது .ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. அதனால் சூர்யா கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இந்த படம் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் புறநானூறு படத்தைப் போலவே ரெட்ரோ திரைப்படத்தையும் கொஞ்சம் விட்டிருந்தால் சூர்யா மிஸ் செய்திருப்பார் என்ற ஒரு தகவல் இப்போது கிடைத்துள்ளது.

இந்த படத்தில் சூர்யா ஏதோ அடம்பிடித்தாராம் .அதாவது படத்தின் கதையை கேட்டு தான் இந்த படத்தில் நடிக்கவே ஒத்துக் கொண்டார் .ஆனால் சில காட்சிகளில் அவருக்கு உடன்பாடு இல்லையாம் .அதனால் கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு சில காட்சிகளை மாற்றும்படி அடம்பிடித்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதனாலையே கார்த்திக் சுப்பராஜுக்கும் சூர்யாவுக்கும் இடையே வாக்குவாதமும் நடந்ததாம். அதன் பிறகு சூர்யாவின் நண்பர் தலையிட்டு இப்படித்தான் புற நானூறு திரைப்படமும் கைவிட்டு போனது. அதை போல இந்தப் படமும் ஆகணுமா என சூர்யாவிடம் சொல்லி சமாதானம் செய்திருக்கிறார். கடைசியில் சூர்யா சொன்னதின் பேரில் ஒரு சில இடங்களில் காட்சிகளை மாற்றி அமைத்திருக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ்.