Connect with us

Cinema News

நான் நடிச்சதிலையே இதுதான் மோசமான திரைப்படம்… தமன்னா கொடுத்த திடீர் ஷாக்!

Tamannaah: பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் தமன்னா தன்னுடைய திரை வாழ்க்கையிலேயே மோசமான படமாக நினைக்கும் படம் ஒன்றை பேசி இருக்கும் விஷயம் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

கேடி படத்தில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தமன்னா. அப்படத்தினை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவுடன் வியாபாரி படத்தில் நடித்திருப்பார். அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்தது. அதை எடுத்து தனுஷின் படிக்காதவன் படத்தில் நடித்திருந்தார்.

அங்கிருந்து அவருடைய திரைப்பயணம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது. தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகை ஆக திகழப்பட்டார். பையா, சிறுத்தை, தில்லாலங்கடி என தமன்னா நடிப்பில் தொடர்ச்சியாக திரைப்படங்கள் வெளியானது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களிலும் தொடர்ச்சியாக நடித்து வந்தார். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்த நடித்ததுதான் தமன்னா திரை வாழ்க்கையில் மிகப்பெரிய அடையாளமாக மாறியது.

ரஜினிகாந்த் வெற்றி திரைப்படம் ஆன ஜெயிலரில் இவர் ஆடிய ஒற்றை பாடல் இன்றளவும் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆகியிருக்கிறது. தொடர்ச்சியாக தமன்னா தற்போது பாலிவுட் சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். வெப்சீரிஸ்களில் நடிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தமன்னா தன்னுடைய திரை வாழ்க்கையில் தான் நடித்ததிலேயே மோசமான திரைப்படம் ஆக விஜய் நடிப்பில் வெளியான சுறாவை குறிப்பிட்டு இருக்கிறார். அதில் தன் கதாபாத்திரம் ரொம்பவே சுமாராக இருக்கும். நடிக்கும் போதே கணித்து விட்டேன் இந்த படம் பெரிய அளவில் ஓடாது.

அப்படி ஒரு அனுபவத்தை நடிக்கும் போது அப்படம் எனக்கு கொடுத்தது. அதை தொடர்ந்து இதுவரை அது போன்ற ஒரு கதையை நான் தேர்வு செய்யவே இல்லை என தெரிவித்திருக்கிறார். தற்போது தமன்னாவின் இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top