Telugu: தெலுங்கில் பிசியாக இருக்கும் இயக்குனர்களுடன் இணைந்து தமிழ் நடிகர்கள் நடிக்கும் எல்லா படமும் சுமாராகவே இருக்கிறது. இந்த லிஸ்ட்டின் படங்கள் அடங்கிய தொகுப்புகள்.
பொதுவாகவே தமிழ் படங்களுக்கு எல்லா மொழிகளிலுமே வரவேற்பு அதிகம். அந்த வகையில் தமிழ் ஹீரோக்களை மற்ற மொழி இயக்குனர்கள் அடிக்கடி தங்கள் படங்களில் புக் செய்வது வழக்கம் தான். ஆனால் தமிழின் ஹிட் அடித்த ஹீரோக்கள் கூட தெலுங்கு பக்கம் அடி வாங்குகின்றனர்.
தமிழில் சூப்பர் படம் கொடுக்கும் நடிகர்கள் தெலுங்கில் நடிக்கும் போது மோசமான தோல்வியை தழுவுகின்றனர். அந்த வகையில் கார்த்தி மற்றும் நாகர்ஜூனா நடித்த திரைப்படம் தோழா. வம்சி படிப்பள்ளி இயக்கிய இப்படம் தெலுங்கில் சிறந்த படமாக ஹிட்டானாலும் தமிழில் சொற்ப வசூல் மட்டுமே குவித்தது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம். தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கிய இப்படம் தமிழில் பிரதானமாக வெளிவந்தாலும் வசூலில் பெரிய அடி வாங்கியது. 40 கோடி கூட வசூல் செய்யாமல் விமர்சன ரீதியாகவும் தோல்வியில் முடிந்தது.
பிரபல நடிகர் விஜய் நடிப்பில் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும் அவரின் நேரடி தமிழ் இயக்குனர்களின் படங்கள் பெற்ற வசூலை பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் வாத்தி. இப்படத்தின் மொத்த வசூலே 100 கோடி என்பதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுவாக தனுஷின் நேரடி தமிழ் படங்கள் இதை விட அதிகமான வசூலை குவிக்கும்.
அந்த லிஸ்ட்டில் மீண்டும் நேரடி தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா தெலுங்கில் நல்ல வசூலை குவித்து வந்தாலும் தமிழில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் தெலுங்கு இயக்குனர்களுடன் தமிழ் நடிகர்கள் கை கோர்க்கும் படங்கள் தோல்வி வரிசையையே பிடிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…