லோகேஷ், நெல்சன் எல்லாம் சமூக விரோதிகள்!.. போட்டு பொளக்கும் பிரபலம்!...

 
லோகேஷ், நெல்சன் எல்லாம் சமூக விரோதிகள்!.. போட்டு பொளக்கும் பிரபலம்!...

திரைத்துறையை பொறுத்தவரை ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. சிலர் குடும்ப செண்டிமெண்ட் படங்களை மட்டும் எடுப்பார்கள். சிலர் அதிரடி ஆக்சன் படங்களை எடுப்பார்கள். சிலர் காவல்துறை சம்பந்தமான ஆக்சன் படங்களை எடுப்பார்கள். சிலர் கருத்து சொல்கிறேன் என ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும் படியான படங்களை எடுப்பார்கள். சுந்தர்.சி போன்ற இயக்குனர்கள் கலகலப்பான காமெடி திரைப்படங்களை எடுப்பார்கள். மாரி செல்வராஜ். ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் தாழ்த்தப்பட்ட. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தங்களின் படங்களில் பேசுவார்கள். இப்படி ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒவ்வொரு பாணி உண்டு.

ஒருபக்கம் கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் போதை மருந்து கடத்தல் தொடர்பான கதைகள் நிறைய வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இயக்குனர் நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் போதை மருந்து தொடர்பான கதைகளை அடிப்படையாக வைத்து தங்களின் திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறார்கள். லோகேஷ் கனகராஜன் கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய எல்லா ஆகிய மூன்று படங்களிலுமே போதை மருந்து கடத்தல் தொடர்பான காட்சிகள் இருந்தது.

அதேபோல் நெல்சனின் கோலமாவு கோகிலா படத்திலும் இது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது.இவர்கள் இருவரும் இப்படி தொடர்ந்து போதை மருந்து கலாச்சாரத்தை காட்டி வருகிறார்கள் என்கிற விமர்சனம் பல வருடங்களாகவே இருக்கிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய தமிழருவி மணியன் ‘நெல்சன், லோகேஷ் கனகராஜ் இவர்கள் இரண்டு பேருமே தொடர்ந்து போதை மருந்து கடத்தல் தொடர்பான படங்களை எடுத்து வருகிறார்கள்.

இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது போல. மாநகரம் படம் துவங்கி இப்போது வரை இதை மட்டுமே செய்து வருகிறார் லோகேஷ். போதை மருந்து கடத்தல் தொடர்பான விஷயங்கள் எப்படி இவர்களுக்கு இவ்வளவு துல்லியமாக தெரிகிறது என்பது எனக்கு தெரியவில்லை. இந்த கலாச்சார சீரழிவை திட்டமிட்டு செய்து அதில் பணம் சம்பாதிப்பதையே தங்களின் கலைச் சேவை என நம்பிக் கொண்டிருக்கும் மட்டகரமான சமூக விரோதிகள் இவர்கள்’ என கோபமாக பேசியிருக்கிறார்.

Tags

From Around the web