அஜித் நடிப்பில் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கிறது இந்த படம். ஏற்கனவே அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதுவும் ஒரு ஃபேன் பாயாக ஆதிக் அஜித்தை எந்த அளவுக்கு படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் என்பதை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் இதுவரை அஜித் எந்தெந்த படங்களில் ஒரு மாசான கெட்டப்பில் நடித்தாரோ அத்தனை கெட்டப்களையும் ஒரே படத்தில் காட்டி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
பில்லா, வேதாளம் ,தீனா ,அமர்க்களம் என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் அஜித் நடித்த கெட்டப்கள் அனைத்துமே இந்த படத்தில் இருப்பது ரசிகர்களை பெரும் கொண்டாட்டத்தில் திகைக்க வைத்திருக்கின்றது ,அதனால் இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா ஆறாவது முறையாக இணைந்து இருக்கிறார்.
ரம்யா என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். அது மட்டுமல்ல பிரசன்னா ,சுனில், அர்ஜுன் தாஸ் என பல முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர் .இதில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு பிரம்மாண்ட ஹிட்டடித்த விண்டேஜ் பாடல் இடம் பெற்றிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ். அவருடைய மியூசிக் எந்த அளவு ரசிகர்களை கூஸ் பம்பில் வைத்திருக்கும் என அனைவருக்கும் தெரியும். இதில் இந்த விண்டேஜ் பாடல் இடம்பெற்றது மேலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்தப் பாடல் எதிரும் புதிரும் படத்தில் ராஜூ சுந்தரம் சிம்ரன் ஆகியோர் நடனத்தில் வெளிவந்த தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடல்.
அதுவும் அர்ஜுன் தாசுக்கு அந்த பாடல் காட்சி இந்த படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. வில்லனாக இருந்தாலும் அர்ஜுன் தாசுக்கும் இந்த படத்தில் ஒரு டூயட் சாங் இருக்கிறதாம். அதற்காகத்தான் இந்த பாடலை பயன்படுத்தி இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…