அஜீத்குமார் சினிமா, கார் ரேஸ் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விடாமுயற்சி படத்தில் நடித்தார். படமோ பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து அவருக்கு குட் பேட் அக்லி படமும் வெளியாக உள்ளது.
அஜீத்தைப் பொருத்தவரையில் எனக்கு எந்தப் பட்டமும் தேவையில்லை. ஏகே, அஜீத்னு அழைத்தால் போதும்னு தனது ரசிகர்களிடம் ஸ்ட்ரிக்டாக சொல்லி விட்டார். அதனால் இப்போது அஜீத், ஏகேன்னு தான் எல்லாரும் சொல்றாங்க. இப்படி சொல்ல கூட ஒரு துணிவு வேண்டும். அந்த வகையில் அவருக்கு தல என்ற பட்டம் எப்படி வந்ததுன்னு பார்க்கலாமா…
தல போல வருமா: தமிழ்த்திரை உலகில் அஜீத்தை அல்டிமேட் ஸ்டார்னு சொல்வாங்க. நிறைய ரசிகர்கள் தலன்னு கெத்தா சொல்வாங்க. இன்னும் சொல்லப்போனால் அவரது பாடல் கூட ‘தல போல வருமா’ன்னு வந்து பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
‘தல’ என்ற பெயர் அவருக்கு ரெட் படத்தில் இருந்துதான் வந்தது. அதுல அவரை தலன்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா அந்தப் பேரு வரக் காரணம் யாருன்னு பார்க்கலாமா… அட அவரே சொல்லிட்டாரு. என்னன்னு பாருங்க.
மகாநதி சங்கர்: முதன் முதலில் நான்தான் அஜீத் சாரை ‘தல’ என்று கூப்பிட்டேன். துணிவு படத்தோட சூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் போகும்போது கூட, அஜீத் சார் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஒரு 10 நிமிஷம் விடவே இல்லை. அப்புறம் கேமராமேன் கிட்ட, சார் இவர்தான் என்னை முதல்ல தலன்னு கூப்பிட்டாரு என அறிமுகம் செய்து வைத்தார் என்கிறார் மகாநதி சங்கர்.
ரெட்: 2002ல் சிங்கம்புலி இயக்கத்தில் அஜீத், பிரியாகில், சலிம்கௌஸ், மணிவண்ணன், ரகுவரன், ராஜேஷ் உள்பட பலர் நடித்த படம் ரெட். இந்தப் படத்துக்கு தேவா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் தான் மகாநதி சங்கர் வில்லன் சலீம் கௌஸின் அடியாளாக வருவார். அப்போது அஜீத்தைத் தலன்னு சொல்வார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…