Cinema News
கதை, திரைக்கதைக்கு எம்பேரை போடு… டைரக்டரை டார்ச்சர் செய்த சிம்பு… சட்டையை பிடித்துத் தூக்கிய டிஆர்..
சிம்பு 2007ல் கெட்டவன் என்ற படத்தைத் துவங்கினார். இதற்காக ஒரு பாடலும் தயாரானது. திடீர் என படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இதுகுறித்து கெட்டவன் பட இயக்குனர் நந்தவனம் நந்தகுமார் என்ன சொல்றாருன்னு பாருங்க…
நான் சிம்புவுக்கு ரொம்ப க்ளோஸா இருந்தேன். அவர் என்னை எல்லா இடத்திலும் நம்புற இடத்தில் நான் இருந்தேன். அவரால நயன்தாரா பக்கத்துல நிக்க வேண்டி இருந்தது. நயன்தாரா சிம்புவைப் பிரிஞ்சதும் நான் அவரைப் பார்த்த போதெல்லாம் என்னை அவாய்டு பண்ணினதைப் பார்க்க முடிந்தது
கெட்டவன் படத்தை டைரக்ட் பண்ணி டிராப் ஆன மாதிரி சிம்புவை வைத்து நெல்சன் வேட்டை மன்னன்; என்ற படத்தை இயக்கி டிராப் ஆனது. அப்போ சிம்பு லண்டன்ல இருந்தாரு. கெட்டவன் படத்துக்கு முதல்ல அவருதான் நடிக்கிறதா இருந்தது.
ஆனா கதை, திரைக்கதை, இயக்கம் அவரு பேரைப் போட்டுக்கறேன்னு சொன்னாரு. அதுல தான் நான் வெளியே வந்தேன். அதுக்கு அப்புறம்தான் எஸ்.ஜே.சூர்யா, பரத், ஜீவான்னு ஒவ்வொருத்தரா பார்த்து யாரையாவது நடிக்க வைக்கலாம்னு பேசுனாங்க.
தயாரிப்பு தரப்புல வந்து பரத்துக்கு என்ன செலவோ அதையே தான் சிம்புவுக்கும் கொடுக்கப்போறோம். அதே மாதிரி சம்பளம் தான் கொஞ்சம் அதிகம். பரத்துக்கு 4 கோடி. சிம்புவுக்கு 9 கோடி. மற்ற எல்லா செலவும் சேர்த்தா ரெண்டு பேருக்கும் ஒண்ணுதான். அதனால சிம்புவையே நடிக்க வைக்கலாம். கதை, திரைக்கதை தானே போட்டுக்கட்டும்னு என்னை சமரசம் பண்றாங்க. நான் முடியாதுன்னுட்டேன்.
கதை, திரைக்கதை, வசனத்தை நான் திருடிக்கறேன்னு கேட்டது உங்க கிட்ட மட்டுமல்ல. மன்மதன்… வல்லவன் பட புரொடியூசரும் புலம்பிருக்காரு…ன்னு ஆங்கர் சொல்கிறார். அதற்கு நந்தகுமார் அந்த அடிப்படையில் இந்த சம்பவமும் நடந்தது என சிரிக்கிறார்.

director nandhakumar
இப்போ என்னாச்சுன்னா டி.ஆர்.வீட்டுல போய் சம்பளம் பேசப்போனபோது கதை, திரைக்கதையை பையன் பண்ணுவாரு. அவரு சொல்லிட்டாப்லன்னு டிஆர். சொல்ல, தயாரிப்பு தரப்பில் என்னைப் பற்றி சொல்லிருக்காங்க. உடனே வெளியே வந்து என் சட்டையைப் பிடிச்சி சுவத்துல தூக்கிட்டாரு. அப்புறம் ரொம்ப இதா பேசுனாரு. அப்புறம் என்னைக் காருல வெளியில உட்கார வச்சிட்டாங்க. அப்புறம் நான் மறுநாள் ஆபீஸ் போனேன்.
‘சிம்பு வந்ததுக்கு அப்புறம் இந்த புராஜெக்ட் பத்திப் பேசுவோம்னாரு. அப்புறம் பட்டியல் சேகர் சிம்புவுக்கும், உனக்கும் ஒத்து வராது. என் பையன் கிருஷ்ணா இருக்கான். அவன்கிட்ட சொல்லுன்னுட்டாரு. ஆனா அவனோ குண்டா இருக்கான. கெட்டவன் கேரக்டர்ல ஒல்லியா இருக்கணும்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.