Categories: Cinema News latest news

கமல் சொந்த நிறுவனம் தொடங்க இதுதான் காரணமாம்… இயக்குனர் சொன்ன சீக்ரெட்

கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா. இவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க. ராஜ்கமல் பிலிம்ஸ் ஆரம்பிச்சதுக்குக் காரணமே கமலுக்குப் பிடிக்கிற படங்கள், அவருக்கு வேணும் என்கிற படங்களை எந்தத் தடையும் இல்லாம செஞ்சிடணும்கறதுதான்.

ராஜ்கமல் பிலிம்ஸ்: அதுக்குத்தான் ராஜ்கமல் ஆரம்பிக்கப்பட்டது. கமர்ஷியல் படங்கள் கொடுக்குறதைத் தவிர்த்து மற்ற படங்கள் கொடுக்குறதுக்கு ஒரு ஸ்பேஸ் வேணும். அதுக்குத் தான் இந்த நிறுவனத்தைக் கமல் சார் ஆரம்பிச்சிருக்காரு. இப்பவும் நல்ல கதை, நல்ல புராஜெக்டா இருந்தா எடுப்பாங்க. விக்ரம் படம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு பெரிய கேன்வாஸைப் பண்ணிக் கொடுத்துருக்கு. அதை அவங்க தொடர்ந்து பண்ணிக்கிட்டு இருப்பாங்க.

முடியாத காரியம்: விஸ்வரூபம் படம் ஆரம்பிச்சி 5 பேரு டைரக்டர் ஆகிட்டாங்க. அசிஸ்டண்ட் டைரக்டர், கேமராமேன்னு 5 பேரும் டைரக்டர் ஆகிட்டாங்க. எம்பிபிஎஸ் படிக்கிற 4 வருடம், 5 வருட படம் அது. அதேபோல பல அனுபவங்களைக் கத்துக்கிட்டோம். முடியாத காரியங்களைப் பண்ணச் சொல்வது, சாதிப்பதுன்னு நிறைய விஷயங்கள் நடந்தது. இன்னும் சொல்லப் போனா 60 பேர் அந்தப் படத்துல வேலையை விட்டுப் போனாங்க.

5 வருஷம்: அவ்ளோ பெரிய பீரியடு. 5 வருஷம் டிராவல். அதைத் தான் சொல்றேன். கமல் கூட ஒர்க் பண்ணின எல்லா விஷயங்களுமே எனக்கு சந்தோஷமான விஷயம்தான். சின்ன சின்ன விஷயங்களும் பண்ணிருக்கோம். அவரோட கவிதைகளை ஆடியோ பண்றது, சின்ன விஷயம் எழுதிக் கொடுப்பாரு. அதை டைப் பண்ணுவோம். எல்லாமே சந்தோஷமானவைதான்.

ஹேராம்: அன்பே சிவம் படத்தைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றது என் தீவிர நண்பர். அவன் கமல் சார் வெறியன். அவன் படத்துல தலைவர் சொதப்பிட்டாருடான்னு சொன்னான். அவன் படத்தைப் புரிஞ்சிக்கவே முயற்சி பண்ணல. ஆனா எங்களுக்கு பேச்சே வரல. ஹேராம் படத்தைப் பார்த்துட்டு நாம வேற ஒரு உலகத்துல இருக்கோமோன்னு தோணுச்சு. நடிப்பு இப்படியும் பண்ணலாமான்னு ஆச்சரியம் இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படமும் ராஜ்கமல் பிலிம்ஸ்சுக்கு மிகப்பெரிய வசூலைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v