Connect with us

Cinema News

எதாவது கிடைக்காதானு அலையுறாங்க.. விஜய் பற்றிய சீக்ரெட்! கும்மாளத்தில் ரஜினி ஃபேன்ஸ்

சில காலமாகத்தான் ரஜினி விஜய் என்ற ஒரு போட்டி இல்லாமல் இருக்கிறது. லியோ படத்திற்கு முன்பு வரை ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மாறி மாறி சோசியல் மீடியாக்களில் கருத்துக்களை பதிவிட்டு சண்டையிட்டு வந்தனர் .அதற்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் சொன்னதிலிருந்து. ஆனால் சரத்குமார் அப்படி சொன்னாலும் அதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை விஜய்.

அதனால் கூட கொஞ்சம் ரஜினி ரசிகர்கள் விஜய் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் மட்டும்தான். தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவில் இவரை தான் சூப்பர் ஸ்டார் என மற்ற மொழி சினிமா நடிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது ஒரு மறுப்பு செய்தியாவது விஜய் கூறியிருக்கலாமே என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் அதை விஜய் ஒரு மேடையில் பேசினார். அதற்கும் ரஜினி ரசிகர்கள் இது மிகவும் தாமதமாக சொன்னதுதான். ஆரம்பத்திலேயே இதற்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கலாம் என கூறினார்கள் .அதன் பிறகு சமூக வலைதளங்களில் அதைப் பற்றிய எந்த ஒரு பேச்சும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் விஜயை பற்றிய யாருக்கும் தெரியாத ஒரு செய்தியை பேசி இருக்கிறார் .

அதை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள் விஜயை வச்சு செய்து வருகின்றனர். அதாவது போதைப் பொருள் வழக்கு சம்பந்தமாக இப்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் கப் சிப் என இருக்கிறது. அடுத்து யார் மாட்டப் போகிறார்கள் எந்த நடிகர் நடிகைகளுக்காவது மேலும் தொடர்பு இருக்கிறதா என போலீசார் வலைவீசி தேடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது விஜய் அரசியலிலும் தீவிரமாக இருப்பதால் அவரை இந்த வழக்கில் எப்படியாவது சிக்க வைத்து விடலாம் என்ற ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கின்றது.

அதனால் இந்த வழக்கில் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்ற வகையில் பல கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பிரபலம் விஜய்யை பற்றி கூறும் பொழுது மாலை ஆறு மணிக்கு மேல் அவரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச் சொல்லுங்கள். முடியாது. ஏனெனில் ஆறு மணிக்கு மேல் அவர் சரக்கு போட்டு மட்டையாகி விடுவார். அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர மாட்டார் என ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் பொழுது விஜய்க்கு ஏற்கனவே சுகர் இருக்கிறது. சுகர் உள்ள ஒருவர் எப்படி சரக்கு அடிக்க முடியும். அதனால்தான் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் இரவு நேரத்தில் இரண்டு இட்லிகள் மட்டுமே சாப்பிடுகிறார். அளவோடு சாப்பிட்டு வருகிறார் என்றெல்லாம் பேசி இருக்கிறார் .இதை பயன்படுத்திக் கொண்ட ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களை டேக் செய்து எங்க தலைவரையா பிபி பேஷண்ட் சுகர் பேஷண்ட் என சொன்னீர்கள்? இப்போ விஜய்யின் ரூபம் தெரிந்து விட்டது என நக்கல் அடித்து வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top