Connect with us

Cinema News

பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்.. கூஸ் பம்பை ஏற்படுத்திய விஜயின் மூன்று படங்கள்

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். சினிமாவிற்கு வந்ததிலிருந்து இப்போது வரை ரசிகர்களுக்கு பிடித்தமாதிரிதான் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் விஜய். குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கான படமாகத்தான் இருக்கும். விஜய் படங்கள் ரிலீஸ் என்றால் ஒரே கொண்டாட்டமும் ஆட்டமுமாகத்தான் இருக்கும். மாஸ், ஆக்‌ஷன் , கமெர்ஷியல் இது இருந்தால்தான் அது விஜய் படம்.

ஆனால் ஆரம்பத்தில் செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தே விஜய் படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதன் விளைவு இன்றுவரை விஜய்க்கு என ஃபேமிலி ஆடியன்ஸ்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாகத்தான் விஜயின் படங்கள் இதுவரை இருந்திருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி ஹியூமருக்கும் பஞ்சமிருக்காது.

ஆக்‌ஷனுடன் ஹியூமரையும் சிறப்பாக செய்யக் கூடிய நடிகர்களில் விஜய்தான் தி பெஸ்ட் நடிகராகத்தான் இருக்கிறார். அஜித்துக்கும் சரி சூர்யாவுக்கும் சரி ஹியூமர் செட்டாகாது. ஆனால் விஜய்க்கு அது சரியாக பொருந்தும். விஜய் தற்போது ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு தனது அரசியல் பணிகளை ஆரம்பித்துவிட்டார். இனிமேல் முழு நேர அரசியல் வாதியாகத்தான் விஜய் இருக்க போகிறார்.

இந்த நிலையில் விஜயின் படங்களில் பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் படமாக எந்தெந்த படங்கள் இருந்திருக்கின்றன என்பதைத்தான் பார்க்கப் போகிறோம். சில படங்களை ஓடிடியில் பார்க்கும் போது ச்ச இந்தப் படம் மட்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தால் ரசிகர்கள் கொண்டாடி இருப்பார்களோ என சொல்ல வைக்கும். அப்படி தியேட்டரில் ரிலீஸாகி ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடிய விஜயின் மூன்று படங்களைத்தான் பார்க்கப் போகிறோம்.

இண்டெர்நேஷனல் தரத்தில் பக்கா ஸ்கிரீன் ப்ளேயில் அமைந்த படமாக பார்க்கப்பட்டது துப்பாக்கி திரைப்படம். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ப்ரேமுக்கு ப்ரேம் ட்விஸ்ட், எதிர்பார்ப்பு என ரசிகர்களை கூஸ் பம்பில் வைத்துவிட்டார் முருகதாஸ். அதற்கேற்ப படத்தின் இசையும் டாப் நாட்ச். இன்றும் இந்தப் படத்தை டிவியில் போட்டாலும் பார்க்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். விஜயின் கெரியரில் தி பெஸ்ட் படமாகவும் துப்பாக்கி படம் இருக்கும்.

theri

theri

அடுத்ததாக கத்தி. இந்தப் படமும் முருகதாஸ் இயக்கத்தில்தான் வெளியானது. டபுள் ஆக்‌ஷனில் விஜய் நடிக்க ஒரு சீனில் வெளி நாட்டு பெண்கள் தன்னை அடிக்க வருகிறார்கள் என்று தெரியாமலேயே பேட்டி கொடுப்பார் விஜய். ஆனால் நடந்தது வேறு. அப்போது விஜயின் ரியாக்‌ஷன் ப்ளஸ் அனிருது பிஜிஎம் என அந்த சீனே பக்கா கூஸ் பம்பை ஏற்படுத்தும். இந்தப் படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

அடுத்ததாக தெறி படம். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த படம் தெறி. ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை பிரமிக்க வைத்திருப்பார் அட்லீ. ஆனால் இந்தப் படத்தில்தான் விஜய் மிகவும் அழகாக இருப்பார். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த மூன்று படங்களையும் அஜித் ரசிகர்களும் கொண்டாடினார்கள் என்பதுதான் உண்மை.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top