Connect with us

Cinema News

விஜய் தவிற எந்த ஹீரோ மேலயும் நம்பிக்கை இல்ல! அதான் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். விஜயின் படங்கள் ரிலீஸாக போகிறது என்றால் முதலில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவாக இருக்கும் என்றால் ஃபேன்ஸின் செலிபிரேஷன்தான்.குறிப்பாக ரோகிணி தியேட்டரில்தான் அனைத்து விதமான கொண்டாட்டங்களும் நடக்கும். சில பேர் மும்பையில் இருந்து வந்திருக்கிறேன். பெங்களூரில் இருந்து வந்திருக்கிறேன் என்றெல்லாம் கூறுவார்கள்.

அந்தளவுக்கு ஃபேன்ஸ் விஜய் மீது அளவுக்கதிகமான பாசத்தையும் அன்பையும் வைத்திருக்கிறார்கள். அதனால் கண்டிப்பாக ஃபேன்ஸ் விஜயை மிஸ் செய்வார்கள். ஏனெனில் விஜய் அடுத்ததாக அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். ஜன நாயகன் திரைப்படம் தான் அவருடைய கடைசி படம். இதை பற்றி ரோகிணி தியேட்டர் ஓனர் கூறும் போது விஜயின் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவதை விட அவருடைய பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்யும் போதுதான் கூடுதலாக ரசிகர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்,

புதுப்படங்களை விட ரீ ரிலீஸ் படங்களுக்குத்தான் மவுசு அதிகமாக இருக்கிறது. இதுதான் தளபதியின் தாக்கம். வேறு எந்த நடிகரின் பிறந்த நாளுக்கும் இப்படி ரீ ரிலீஸில் கலெக்‌ஷனை அள்ளாது. சமீபத்தில் கூட விஜயின் பிறந்த நாளுக்கு லியோ படத்தை ரீ ரிலிஸ் செய்தோம். சச்சின் 2005 ல் வெளியானது ,இப்போ அந்த படத்தை ரீ ரிலீஸ் செய்தோம். ரிலீஸ் ஆகும் போது சச்சின் பெருசா போகவில்லை.

ஆனால் ரீ ரிலீஸில் பெரிய கலெக்‌ஷனை பார்த்தது. அதனால் விஜயை தவிற வேறு எந்த ஹீரோக்கள் மேலேயும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் கொரானா காலகட்டத்தில் சினிமாவே அவ்வளவுதான் என்ற சூழ் நிலை இருந்தது. சரியான 11 மாதங்கள் கழித்து 50 சதவீதம் இருக்கை அடிப்படையில் தியேட்டர்களை திறக்க சொன்னார்கள். அப்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாக காத்துக் கொண்டிருந்தது.

தைரியமாக விஜய் மாஸ்டர் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வந்தார். அந்த நேரத்தில் ஓடிடியில்தான் படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டிருந்தன. ஆனால் விஜய் நான் சினிமாவில் இருந்து வந்தவன். அதனால் என் படம் சினிமாவில்தான் ரிலீஸ் ஆக வேண்டும் என கூறி தியேட்டரில் வெளியிட சொன்னார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் லலித்துக்கு ஒரே குழப்பம். அப்போது மாஸ்டர் திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளத்தை லலித்திடம் விஜய் கொடுத்துவிட்டாராம். படம் லாபம் வந்தால் மட்டும் சம்பளத்தை கொடுங்கள் என கூறினார்.

எதிர்பார்த்ததை போல் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் தியேட்டர் உரிமையாளர்களும் வாழ வேண்டும் என நினைப்பவர் விஜய் என அந்த பேட்டியில் மற்றுமொரு தியேட்டர் ஓனர் கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top