தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரசாந்த் முதல் படத்திலேயே பெரிய ஹிட்டை கொடுத்தார். ஹீரோ என்ற முழு தகுதியும் நல்ல திறமையும் இருந்ததனால் வைகாசி பொறந்தாச்சு படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க கூடிய வாய்ப்பு பிரசாந்தை தேடி வந்தது.
வந்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரசாந்த் ஒரு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்தார். சினிமாவிற்குள் வந்த குறுகிய காலத்திலேயே பெரிய பெரிய இயக்குனர்களோடு இணைந்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தார் பிரசாந்த். இன்று டாப் நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் இவர்களை மிஞ்சும் உயரத்தில் 90கள் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகராக இருந்தார் பிரசாந்த்.
ஆனால் இதே சூழல் அவருக்கு தொடர்ந்து கிடைத்ததா என்றால் இல்லை. பீக்கில் இருக்கும் போதே அவருக்கு குடும்ப பிரச்சினை ஏற்பட்டு மொத்தமாக சுருண்டார் பிரசாந்த். அதுமட்டுமில்லாமல் தியாகராஜன் தான் பிரசாந்தை கெடுத்தது என்றும் அவரின் தலையீடு அதிகமாகவே இருக்கிறது என்றும் பல விமர்சனங்கள் எழுந்தன.
இப்படி எல்லா பிரச்சினைகளையும் கடந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு கம்பேக் கொடுத்தார் பிரசாந்த். ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக்கான அந்தகன் படத்தின் மூலம் ஹீரோவாக கம்பேக் கொடுக்கிறார் பிரசாந்த். இந்தப் படத்தில் பிரசாந்துடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, கார்த்திக் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
நீண்ட இழுபறிக்கு பிறகு அந்தகன் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் அந்தகன் படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிளை விஜயுடன் இணைந்து பிரபுதேவாவும் சேர்ந்து வெளியிட்டார்கள். இதற்கு பின்னணியில் என்ன காரணம் என்பதை வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார்.
அதாவது பிரசாந்த் ஒரு காலத்தில் ஹீரோவாக கொடிகட்டி பறந்தவர் என விஜய்க்கு நன்றாகவே தெரியும். அதனால் இன்னமும் பிரசாந்தை விஜய் ஹீரோவாகவே ட்ரீட் செய்து கொண்டிருக்கிறார் என பிஸ்மி கூறினார். மேலும் அந்தகன் என்ற தலைப்பு சாமானிய மக்களுக்கு அந்தளவு பரீட்சையமில்லாத தலைப்பு. இதுவும் படத்திற்கு ஒரு மைனஸ். அதனால் இதை ரசிகர்களிடம் ஒரு அட்டென்ஷனை ஏற்படுத்தவே விஜயை வைத்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என பிஸ்மி கூறினார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…