Connect with us

Cinema News

இந்த விஷயத்துல கமலை மிஞ்ச முடியுமா? இதனால்தான் இந்தியன் தாத்தாக்கு அது இல்லையாம்!

கமல்ஹாசன் தன்னுடைய பிரம்மாண்ட படைப்பான இந்தியன் படத்தில் அதிக முயற்சி எடுத்து இருக்கிறார்.

இந்தியன் தாத்தாக்கு ஏன் மீசையில்லைங்குறதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு… அது தெரியுமா?

இந்தியன் முதல் பாகத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் முக்கியமானது. அந்த காலகட்டத்தில் கதையைத் தயார் செய்தவுடன் கமலை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார் ஷங்கர். கமலுக்கு கதை பிடித்தவுடன் உடனே நடிக்க சம்மதமும் தெரிவித்துவிட்டார். அதேநேரம், வயதான கெட்-அப்புக்கு எப்படி தயராகலாம் என்று சிந்திக்கவும் தொடங்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இதுவரை வராத அளவுக்கு இந்த வயதான கெட்-அப் பேசப்பட வேண்டும் என்று முடிவு செய்த அவர், அந்த கெட் அப்பின் ஒப்பனைக்காக அமெரிக்கா செல்ல முடிவும் செய்திருக்கிறார். அப்படி அமெரிக்கா சென்ற கமல், ஹாலிவுட் மேக் அப் கலைஞர் மைக்கேல் வெஸ்ட் மோரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

தமிழில் அதுவரை அறிமுகமாகாத புராஸ்தட்டிக் மேக்கப்பில் வயதான கெட்-அப்பை தத்ரூபமாகக் கொண்டுவரவும் முயற்சி மேற்கொண்டிருக்கிறார். அதுவரை இந்தியன் தாத்தா கெட் அப் எப்படியிருக்கும் என்று இயக்குநர் ஷங்கருக்குக் கூட தெரியாதாம். ஒரு லுக்கை ரெடி செய்துவிட்டு இந்தியா திரும்பிய கமல், ஷூட்டிங் நடக்கும் இடத்துக்குப் போயிருக்கிறார்.

அங்கு ஷங்கருக்கே தெரியாமல் மேக்கப்பும் செய்துகொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, ஷங்கரிடம் அந்த மேக் அப்பை காட்டி அவர் எதுவும் திருத்தம் சொன்னால் அதை சரி செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டு, மீசையை மட்டும் ஒட்டாமல் மீசையில்லா இந்தியன் தாத்தாவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷங்கரை சந்தித்திருக்கிறார். அப்போது, அவரைப் பார்த்து ஏதோ வயதானவர் என்று நினைத்து ஷூட்டில் இருந்தவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.

ஆனால், இயக்குநர் ஷங்கர் இவரைப் பார்த்ததும் சரியாகக் கண்டுபிடித்ததோடு, சூப்பர் சார் என்று வியந்து பாராட்டவும் செய்திருக்கிறார். அத்தோடு கமலின் மேக் அப்பை மொத்த படக்குழுவும் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். மீசையைப் பற்றி கமல் சொன்னதும், வேண்டாம் சார் இப்படியே ஓகே பண்ணிடலாம் என்று ஷங்கர் சொன்னாராம். அதன்பிறகே, “சின்ன வயசுல கொஞ்சும்போது மீசை குத்துதுன்னு அழுவான். அவனுக்கு வலிக்கக்கூடாதுங்கிறதுக்காக மீசைய இழந்த சேனாபதி, இன்னைக்கு அவனையே இழக்கத் தயராகிட்டான்’ என்கிற வசனத்தையும் சேர்த்திருக்கிறார் ஷங்கர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top