Connect with us

Cinema News

இதனால் தான் விஜய் டிவி பக்கம் தலை காட்டுவதில்லை… பதில் கொஞ்சம் ஆணவமா இருக்கே மைனா!…

சின்னத்திரையில் நடிப்பிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் தலைக்காட்டி வந்த மைனா பிக்பாஸில் நடந்த எலிமினேஷனால் தான் அந்த பக்கம் வரவில்லை என வதந்தி கசிந்தது.

விஜய் டிவியில் சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டி வந்த மைனா நந்தினி திடீரென சின்னத்திரை பக்கம் வராமல் இருப்பதற்கான காரணத்தை தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்த நந்தினி பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். அந்த சீரியலின் கேரக்டர் பெயரான மைனா என ரசிகர்களால் செல்லமாக இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறார். திரை வாழ்க்கையை விட நந்தினியின் சொந்த வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகள் நடந்தது.

அவருடைய முதல் கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில், நந்தினி மீது பெரிய அளவில் விமர்சனம் கிளம்பியது. இருந்தும் தனது குடும்பத்திற்காக அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் தன்னுடன் இணைந்து நடித்து வந்த யோகி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். நந்தினி பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் கால் பதித்தார். அதில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. பாதி எபிசோட்களில் ரசிகர்களால் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து நந்தினி தற்போது சின்னத்திரைகளில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். இது குறித்து சில வதந்திகளும் கிளம்பியது.

தற்போது டிவி பக்கம் வராமல் இருப்பதற்கான காரணத்தை நந்தினி தன்னுடைய பேட்டி ஒன்றல் குறிப்பிட்டு இருக்கிறார். நான் முதலில் டிவி தொடர்களில் தலை காட்டினேன். அது மூலமாக எனக்கு பெரிய திரையில் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் என்னுடைய கனவு. அதை நோக்கி நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

என்னை யாரும் ஒதுக்கவெல்லாம் இல்லை. என்னை இன்னமும் ரியாலிட்டி ஷோக்களுக்கு அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என்னால் தான் அதற்கு செல்ல முடியவில்லை. தற்போது நான் சினிமா மற்றும் வெப் சீரிஸ்களில் என்னுடைய கவனத்தை செலுத்திக்கொண்டு வருகிறேன். வேறு எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான சட்னி சாம்பார் வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top