Categories: Cinema News latest news

நாயகனோட விட்டிருக்கலாம்.. 37 வருஷம் இதுக்காகத்தான் காத்திருந்தீங்களா கமல்?

Thug Life Review: கமல் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கிறது தக் லைஃப் திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல பிரச்சினைகளுக்கு நடுவே இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் எக்ஸ் வலைதள பக்கத்தில் படத்தை பற்றிய விமர்சனங்களை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது .

37 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் தக் லைஃப். படத்தை பற்றி இப்போது வரை கலவையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. படத்தில் ஏகப்பட்ட பிரம்மாண்ட காட்சிகள் இருந்தாலும் இறுதியில் படத்தில் தொய்வு இருப்பதாக விமர்சித்து வருகிறார்கள். கமலின் நடிப்பு எப்போதும் போல சிறப்பாக இருக்கிறது. அதேபோல் சிம்புவும் தனது பங்கை சிறப்பாக ஆற்றி இருக்கிறார்.

ஆனால் இதெல்லாம் படத்தின் இரண்டாம் பாதிக்கு கைக் கொடுக்கவில்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் மணிரத்னம் அவருடைய பாணியில் எப்போதும் போல ஜொலிக்கவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.பெண்களுக்கான கதாபாத்திரமும் முக்கியத்துவம் பெறவில்லை என்று சொல்கிறார்கள். படத்தில் ஜிங்குச்சா பாடலை தவிற எந்த பாடலும் சிறப்பான வரவேற்பை பெறவில்லை என்றும் சொல்கிறார்கள்.

மொத்தத்தில் படம் அந்தளவுக்கு வொர்த் இல்லை என்றும் 37 வருடத்திற்கு பிறகு ரீ யூனியன் என்ற பெயரில் படம் சுமாராகத்தான் இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள். இருந்தாலும் டிரெய்லரில் பார்க்கும் போது படத்தை மிரட்டியிருப்பார் மணிரத்னம் என்றுதான் நினைக்கத்தோன்றியது. ஆனால் கடைசியில் இப்படி எதிர்மறையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கிறது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்