சமீபத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் மிகவும் கவனிக்கத்தக்க பாடலாக அமைந்தது ஜிங்குச்சா பாடல். இந்த பாடலை தெலுங்கில் பாடியவர் மங்லி. இவர் தற்போது போதை வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் தனது 31 வது பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து ஹைதராபாத்தில் உள்ள திரிபுரா ரிசார்ட்டில் கொண்டாடி இருக்கிறார்.
தெலுங்கு திரையுலகை சார்ந்த திரை பிரபலங்கள் பாடகர்கள் என மிக நெருக்கமான நண்பர்களை அழைத்து பார்ட்டி வைத்திருக்கிறார் மங்லி. அதில் விலை உயர்ந்த சரக்குகள் கஞ்சா போன்றவைகள் பரிமாறப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க உடனே விரைந்து சென்றது போலீஸ். அவர்களை தடுத்து நிறுத்த முயன்றிருக்கிறார் மங்லி. அதற்கு போலீசார் எங்கள் கடமையை செய்ய விடுங்கள் என சொன்ன பிறகு அங்கிருந்து மங்லி நழுவி சென்றதாக தெரிகிறது.
அந்த தீவிர சோதனைகளுக்கு பின் விலை உயர்ந்த மது பாட்டில்கள் கஞ்சா பொருள்கள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தெரிந்திருக்கிறது. 48 பிரபலங்கள் கலந்து கொண்ட அந்த பார்ட்டியில் 9 பேர் கஞ்சா பயன்படுத்தியிருப்பதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது .போலீஸ் அனுமதி இல்லாமல் டிஜே கச்சேரி வைத்தது ,விலை உயர்ந்த வெளிநாட்டு சரக்குகள் பயன்படுத்தியது, கஞ்சாப் பொருள்கள் பயன்படுத்தியது என மூன்று பிரிவுகளில் மங்லி மீது வழக்கை தொடர்ந்திருக்கிறது போலீசார்.
இதனால் அவரை இப்போது கைது செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது .ஜகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி தேவஸ்தான பக்தி சேனலில் ஆலோசகராக இருந்திருக்கிறார் மங்லி. இசை போதையில் மயங்க வைத்த மங்லி இப்போது கஞ்சா போதையிலும் நண்பர்களை மயங்க வைத்திருக்கிறார் என நெட்டிசன்கள் மங்லியை பற்றி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Kaur: கடந்த…
Vijay TVK:…
கரூரில் விஜய்…
Vijay TVK:…
SAC: சினிமாவிலும்…