Categories: Cinema News latest news

Thuglife: வக்கிரபுத்தியோடு வந்த தக்லைஃப்… அப்பனுக்கும், மகனுக்குமா திரிஷா வேணும்?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தக் லைஃப் படம் இவ்வளவு மோசமாகப் போகும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இதுதான் இப்போது சமூகவலைதளங்களில் எங்கும் ஒரே பேச்சாக உள்ளது. இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் சங்கர் என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஒரு படம் மோசமா இருக்கலாம். ஏதோ ஒரு வகையில திருப்தி இல்லாம இருக்கும். இது தப்பான படம். கான்செப்ட் தப்பு. மோட்டிவ் கிடையாது. ஒண்ணுமே முழுமையான கேரக்டர் இல்ல. சொல்ல வர்ற கருத்து தப்பானது. சமூகத்துக்குத் தேவையில்லாதது. கமல், சிம்பு, திரிஷா மூவருக்குமான உறவு, அதைக் கொண்டு போயிருக்குறது மோசமாக உள்ளது.

கமலுக்கும் திரிஷாவுக்குமான உறவு, திரிஷாவை அடையத் துடிக்கும் சிம்பு இது அருவருப்பானது. வக்கிரத்தோட உச்சக்கட்டம். இதுல கேங்ஸ்டருக்கான கேரக்டர் என்ன இருக்கு? இவன் கேங்ஸ்டர்ங்கறான். அவன் கேங்ஸ்டர்ங்கறான். கேங்ஸ்டருக்கு என்ன பண்றீங்க? உங்களோட தொழில் என்ன? எதையாவது காட்டுறாங்களா?

நாயகன் படத்துல கள்ளக்கடத்தல் பண்றது தொழில். நாலு பேருக்கு உதவும்னா எது பண்ணினாலும் தப்பு இல்லன்னு சொல்றாங்க. அதை ஏத்துக்க முடியுது. அதை மாஸ்னு சொல்றோம். இதுல அந்த மாதிரி ஒரு காட்சி கூட இல்லையே. ஒரு ரீசன் கூட இல்லையே. எந்த ரீசனுக்காக வந்து சட்டவிரோதமா தொழில் பண்றே. அது தப்பு தானே.

எதிரில் உள்ள வில்லன் கேரக்டர். கூடவே இருக்குற அடியாள்கள் கோஷ்டி, அவங்க அண்ணன் கேரக்டரை மிக மிகத் தவறான கதாபாத்திரமாக காட்டுறாங்க. இவ்ளோ பாசமான தம்பியை ரெண்டு கைகளாலும் ஏந்திப் பிடிக்கணும். நாசர் கேரக்டர் தான் அது. அவருக்கு ஒண்ணுன்னா துடிச்சிப் போறாரு. நாசர் பொண்ணு இறக்குது.

அதுக்குக் காரணமான பையனைத் தேடிப் பிடிச்சிக் கொன்னுட்டு இவரு ஜெயிலுக்குப் போறாரு. இவ்வளவு பார்த்துக்குற தம்பி மேல ஏன் பொறாமை வருது? மலை உச்சில கொண்டு போய் ஏன் தள்ளணும்? கமல் பார்த்துப் பார்த்து வச்சிருக்குற அத்தனை பேரும் துரோகிகளாக மாறிடுறாங்க.

தக்கோட வாழ்க்கையில என்ன நடக்குதுங்கறதை இன்னும் தெளிவா காட்டிருக்கலாமே. கமலை நல்லவராவும் காட்டல. ஆரம்பத்துல இருந்தே நல்லவரா, கெட்டவரான்னு காட்டல. ராவணன் படத்துல இருந்து பொன்னியின் செல்வன் வரை படத்தை எடுத்துப் பார்த்தா மணிரத்னம் அவுட் டேட்டடு தான். பொன்னியின் செல்வன் மட்டும் அவரோட பாணியில இருந்து விலகி பண்ணிருந்தாரு. திரும்ப அவரோட நிலையை தக் லைஃப் சொல்லிருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v