Thuglife: மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருக்கும் திரிஷா வாங்கிய சம்பளம் குறித்த சுவாரஸ்ய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
90களில் நடிப்பிற்குள் வந்த திரிஷா தமிழின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். கோலிவுட்டின் டாப் லிஸ்ட்டில் இருந்தவர் திடீரென சறுக்கி மொத்த மார்க்கெட்டையும் இழந்தார். பல வருடங்களாக வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.
பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து தற்போது மீண்டும் டாப் நாயகியாக வந்து இருக்கிறார். லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லியை தொடர்ந்து தக் லைஃப் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்திற்கு தக் லைஃப் திரைப்படத்தில் நடித்ததற்காக ரூ.12 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, தென்னிந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த சம்பளமாகும்.
முந்தைய படமான லியோவில் திரிஷா ரூ.5 கோடி சம்பளம் பெற்றிருந்தார். 2025ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில், திரிஷாவுக்கு ரூ.6 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
தொடர்ந்து, அஜித் குமார் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், திரிஷா ரூ.8 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இது, ‘விடாமுயற்சி’ படத்துடன் ஒப்பிடுகையில் ரூ.2 கோடி அதிகமாக பெறப்பட்டது.
ஆனால் தற்போது இந்த படங்களை விட தக் லைஃப் படத்துக்கு மிகப்பெரிய சம்பளத்தை பெற்று இருக்கிறார். திரிஷாவின் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே உலகளவில் பல கோடி வசூலித்துள்ளதே திரிஷாவின் இந்த சம்பள உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டது.
நயன்தாரா, ஷாருக்கானின் ஜவான் படத்தில் 10 கோடி சம்பளம் பெற்றிருந்த நிலையில் இதன் மூலம், திரிஷா, நயன்தாராவை முந்தி, தென்னிந்தியாவின் அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்துள்ளார்.
தற்போது கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Ajith: அமராவதி…
Rashmika Mandana:…
Ajith Vijay:…
Seeman: இயக்குனர்…
வெற்றிமாறன் இயக்கத்தில்…