Categories: Cinema News latest news

தக் லைஃப் படத்தில் என்னுடைய ஜோடி சிம்பு? மேடையில் உண்மையை சொன்ன திரிஷா! குழப்புறாங்களே!

Trisha: தக் லைஃப் படத்தில் திரிஷா கமல்ஹாசனின் இன்னொரு ஜோடியாக இருப்பார் என டிரெய்லரில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில் திரிஷா தற்போது சொல்லி இருக்கும் தகவல் அடுத்த குழப்பத்தை கொடுத்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. கமல்ஹாசனுடன் ரவி, மோகன், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

துல்கர் கால்ஷூட் பிரச்னையால் படத்தில் இருந்து விலக அவரை தொடர்ந்து ரவி மோகனும் படத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் முதலில் அறிவிக்கப்பட்ட திரிஷா மட்டும் படத்தில் நீடித்தார். அதன் பின்னரே சிம்பு படத்திற்குள் வந்தார்.

அவருக்காக கதையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டதாக தகவல்கள் கசிந்தது. கமல் மற்றும் சிம்புவின் காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் இன்னொரு காம்போ ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த திரிஷா மற்றும் சிம்பு இருவரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதால் பெரும்பாலும் ஜோடி என்று தான் பலரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஒரு விழாவில் கூட திரிஷா விடிவிக்கு பின்னர் எங்கள் ஜோடி இணைந்து இருப்பதாக கூறி இருந்தார். ஆனால் இதை உடைத்தது தக் லைஃப் படத்தின் டிரெய்லர்.

அதில் குறிப்பிட்ட ஒரு காட்சியில் திரிஷாவை கமல்ஹாசன் கட்டி அணைத்து நான் உன் ஆதாம் எனக் கூறுவார். இதனால் அபிராமி மனைவி, திரிஷா காதலியாக இருக்கலாம் எனக் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தக் லைப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.

அதில் பேசிய திரிஷா, எல்லாருமே விடிவிக்கு அப்புறம் எப்போ சிம்புவுடன் இணைந்து நடிப்பாய் எனக் கேட்டு கொண்டே இருந்தனர். ஜூன்5 படத்தினை போய் பாருங்க. இந்த டிரெய்லரை பார்த்த உங்களுக்கு பல குழப்பம் இருக்கும். அதற்கு விடை படத்தில் தான் இருக்கு.

2 நிமிட டிரெய்லரில் எதையும் கண்டுபிடித்துவிட முடியாது. படத்தில் எல்லாருக்குமே ஒரு பாசிட்டிவ் ஷேட்டும் இருக்கு. அது போல கெட்டவனும் இருப்பான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Published by
ராம் சுதன்