Categories: Cinema News latest news

டைட்டிலுக்காக பல கோடிகளை வாரி இறைத்த சூர்யா… புறநானூறு யாருக்கு கிடைக்கும்?

சூர்யாவுக்குப் பல வாய்ப்புகளைக் கொடுத்து வளர வைத்தவர் இயக்குனர் பாலா. அவருக்கு விட்டுக்கொடுக்கலாம். ஆனா சுதா கொங்கரா வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் தானே தவிர அவருக்கு இதெல்லாம் விட்டுக் கொடுக்கணும்னு அவசியம் சூர்யாவுக்கு இல்லை என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன். இதுகுறித்து அவர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

அமரனைப் பொருத்தவரை ராஜ்குமார் பெரியசாமி வளர்ந்து வர்ற இயக்குனர். சிவகார்த்திகேயன் வளர்ந்த ஹீரோ. படம் பார்த்ததும் ரசிக்க ஆரம்பிச்சாங்க. அது சிவகார்த்திகேயனுக்கு வந்த கூட்டம். ஆனா புறநானூறு படத்துல சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் ரெண்டு பேரும் இருக்காங்க. இவங்களுக்குத் தனித்தனியா கூட்டம் இருக்கு. கூடுதலா ஜெயம்ரவியும் வர்றாரு. அதனால தான் பெரிய பட்ஜெட்ல எடுக்குறாங்க. இன்னொன்னு முந்தைய படம் எவ்வளவு வெற்றி அடையுதோ அதுக்கான பிசினஸ் இருக்கும். இதெல்லாம் சேர்ந்து தான் படத்தோட பட்ஜெட் வருது.

புறநானூறு என்ற டைட்டிலை ஒரு கட்டத்துல சூர்யாவே மாற்றிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துட்டாங்க. சூர்யாவோட டைட்டில் புறநானூறுன்னு அறிவித்த பிறகு மறுபடியும் அதே டைட்டில்ல வேற ஒருத்தர் கொண்டு வந்தா அது சூர்யாவுக்கு தேவையில்லாத மனசங்கடத்தைக் கொடுக்கும்.

இன்னும் 10 வருஷம் கழிச்சிப் பார்க்கும்போது 2 போஸ்டரும் பக்கத்துல வந்து நின்னா அது தேவையில்லாத மனக்கசப்பை உண்டாக்கும். டைட்டிலை மாற்றிக்கிட்டா வேற வேற படமாகிடும். அதனால தான் சுதாகொங்கராவும் அதோட உண்மைத்தன்மையைப் புரிஞ்சிக்கிட்டு வேணாம்னு ஒதுங்கிட்டாங்க.

சூர்யா புறநானூறு டைட்டிலுக்கு கோடிக்கணக்கில் செலவழிச்சது டிஸ்கஷனுக்குத் தான். அது பெரிய ஸ்டார் ஓட்டல் அல்லது பெரிய கெஸ்ட் ஹவுஸ்ல நடக்கும். அப்போ 100 பேரு வந்தா அதுக்கான மொத்த செலவுகளுமே கோடிகள்ல போகும்.

sudha kongara

அடுத்த படம் கிடைக்காத இயக்குனர்கள், நல்ல எழுத்தாளர்கள்னு நிறைய பேரைக் கூப்பிடுவாங்க. அவங்களுக்கு ரைட்ஸ் கொடுப்பாங்க. அதை எல்லாம் சேர்த்துப் பார்த்தா குறிப்பிட்ட தொகை நின்னுடும். அதைத்தான் திரும்ப கொடுத்துருங்க. மொத்தமாகவே இந்த நிறுவனத்துல இருந்து வெளியே போகும்போது செலவு பண்ணின தொகையைக் கொடுத்துருங்க.

ஏற்கனவே வணங்கானுக்கு கோடிகள்ல செலவு பண்ணி அதைத் திரும்ப கேட்கவே இல்லை. பாலாவின் மீது உள்ள மரியாதைக்காக கேட்கல. அந்த மாதிரி சுதா கொங்கராவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது. பாலா வெற்றிக்கான பல வாய்ப்புகளைக் கொடுத்தவர். சுதா கொங்கரா வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். அவ்வளவு தான். அதுக்கான தொகை எவ்வளவுன்னு பேச்சுவார்த்தை போய்க்கிட்டு இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v