Connect with us

Cinema News

2024ல் தமிழ்சினிமாவில் மிரட்டிய வில்லன்கள்… அலற விட்டவர் யாரு?

2024ல் தமிழ்சினிமாவில் பெரிய அளவில் வெற்றியையும் வசூலையும் கொடுத்தப் படங்கள் அதிகம் வரவில்லை. வேட்டையன், அமரன், லப்பர் பந்து, புளு ஸ்டார், வாழை என ஒரு சில படங்களையே சொல்லலாம்.

அந்த வகையில் இன்று வெளியாகி உள்ள விடுதலை 2 படமும் இடம்பெறும் எனத் தெரிகிறது. அது சரி. 2024ல் வெளியான தமிழ்ப்படங்களில் தனது கொடூரமான வில்லத்தனத்தால் மிரட்டிய வில்லன்கள் யார் யார்னு பார்க்கலாமா…

கல்கி கி.பி.2898 – கமல்

இது ஒரு பான் இண்டியா படமாக இருந்தாலும் கமல் நடித்து இருந்ததால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். நாக் அஸ்வின் இயக்கிய இந்தப் படத்தில் யாஸ்கின் என்ற கேரக்டரில் கமல் கிட்டத்தட்ட வில்லன் சாயலில் நடித்திருப்பார்.

பயங்கர திகிலூட்டும் அனுபவத்தைத் தன் அசகாய நடிப்பால் தந்து மிரட்டி இருப்பார். படத்தில் அவரை யாரும் கமல் என்று கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு மெலிந்த தேகம், ஒட்டிய கன்னம், மொட்டைத்தலை என பார்க்கவே மிரட்டியிருப்பார்.

கோட் – விஜய்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய்க்கு 68வது படமாக வெளியானது. வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தான் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக AI தொழில்நுட்பத்தில் அவரை நடிக்க வைத்திருப்பார்கள்.

கோட் படத்தில் மகன் விஜயே வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். அவரது வித்தியாசமான சேஷ்டைகள் பார்ப்பவர்களை பரவசம் அடையச் செய்யும்.

கங்குவா – பாபி தியோல்

பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகர் பாபி தியோல். இவர் தான் சூர்யா நடித்த கங்குவா படத்துக்கு வில்லன். உதிரன் என்ற கேரக்டரில் நடித்து பட்டையைக் கிளப்பி இருப்பார். இவர் ஏற்கனவே பாலிவுட்டில் வெளியான அனிமல் படத்தின் வில்லனாக வந்தவர். தற்போது எச்.வினோத் இயக்கி வரும் விஜய் 69 படத்திலும் இவர் தான் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்தியன் 2 – எஸ்.ஜே.சூர்யா

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் நடிப்பில் அதன் 2ம் பாகம் வெளியானது. இந்தப் படத்தில் கழுத்து நிறைய நகையைத் தொங்க விட்டபடி வந்து அசால்டாக வரும் வில்லன் எஸ்.ஜே.சூர்யா.

இந்தப் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கி விடுவார். அடுத்த பாகத்தில் இவருக்கு நடிக்க நிறைய ஸ்கோப் இருக்கிறதாம்.

மகாராஜா – அனுராக் காஷ்யப்

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான படம் மகாராஜா. விஜய்சேதுபதிக்கு மிரட்டல் வில்லனாக அதே நேரம் ஸ்மார்ட்டாக நடித்தவர் அனுராக் காஷ்யப். இவர் படத்தில் செல்வம் என்ற கேரக்டரில் வருவார். இதே படத்தில் சிங்கம்புலியும் கொடூரமான ஒரு வில்லத்தனத்தைக் காட்டியிருப்பார்.

இவர்தான் நல்லசிவம் என்ற கேரக்டரில் வந்து சிறுமியை வன்புணர்வு செய்யும் கேரக்டரில் நடித்து இருந்தார். விஜய்சேதுபதியின் 50வது படம் வலுவான திரைக்கதையால் சூப்பர்ஹிட் அடித்துள்ளது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top