Connect with us

Cinema News

கமல் எடுத்திருக்கும் முடிவுதான் சரி.. நாங்க இருக்கோம் அவருக்கு! இவரே சொல்லிட்டாரு

தவறாக புரிந்து கொண்டதற்கு தான் எப்படி மன்னிப்பு கேட்க முடியும் என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் தரப்பு வாதத்தை அடுத்து வழக்கை ஜூன் 10ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. இது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் திரைப்பட திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம். கமல்ஹாசனின் கருத்து 100% உண்மையான நேர்மையான கருத்து .

ஏனெனில் அவர் அந்த விழாவில் ராஜ்குமார் குடும்பத்தை பற்றி மிகவும் உயர்வாக பேசி இருந்தார். சிவராஜ் குமார் என்னுடைய தம்பி மாதிரி .ராஜ்குமார் தனது சொந்த அண்ணன் மாதிரி என எல்லா வகையிலும் அந்த விழாவில் கன்னடம் மொழியையும் கன்னட மக்களையும் சிறப்பாகத் தான் பேசியிருந்தார். அவர் சொன்னது என்னவெனில் தமிழ் மொழியின் சிறப்பை பற்றி தான் சொன்னாரே தவிர கன்னட மொழியை எந்த இடத்திலும் இழிவாக பேசவே இல்லை.

கர்நாடக அரசு அதை கையில் எடுத்து அரசியல்வாதிகளின் துணையோடு பல பிரச்சனைகளை பண்ணுகிறார்கள் என்றால் இது உண்மையிலேயே வருந்தத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் கர்நாடக உடனே சினிமாவை தான் குறி வைக்கிறது. படங்களை ரிலீஸ் பண்ண கூடாது என சொல்லி வருகிறார்கள் .அந்த மாதிரி நம் தென்னிந்தியாவில் அதாவது தமிழ்நாடு கேரளா ஆந்திரா இந்த மாநிலங்களில் இதுவரை மற்ற மொழி படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என சொன்னதே கிடையாது.

கர்நாடகாவில் மட்டும் தான் ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதுக்கு கர்நாடகா ஃபிலிம் சேம்பர் துணை போகிறது என்பதுதான் எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சவுத் இந்தியன் சேம்பர் என்ற ஒரு அமைப்பை வைத்திருக்கிறோம். இதன் மூலம் மாதத்திற்கு ஒருமுறை எல்லா மாநில பிலிம் சேம்பரும் இணைந்து கூட்டம் போடுகிறோம். நாங்கள் அண்ணன் தம்பிகளாகத்தான் பழகி வருகிறோம்.

அப்படி இருக்கும் பொழுது அரசியல்வாதிகள் சொல்வதைக் கேட்டு கர்நாடக பிலிம் சேம்பர் எடுத்திருக்கும் இந்த முடிவு எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் முழுமையாக கமலுக்குத்தான் ஆதரவாக இருப்போம். ஏனெனில் அவரைப் பொறுத்த வரைக்கும் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. இது வியாபார ரீதியாக சரியாக இருக்க முடியாது.

subramani

subramani

அவர் கோடி கணக்கில் முதலீடு போட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார். சினிமா சம்பந்தமாக ஏதாவது பிரச்சனை செய்தால் அதில் தவறு இல்லை. ஏதோ ஒரு அரசியல் காரணத்துக்காக இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பது எங்களை பொறுத்த வரைக்கும் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்பதை நாங்கள் ஆணித்தரமாக சொல்கிறோம் என திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top