Connect with us

Cinema News

40ஐ நெருங்குனா இப்படித்தான் போல! திரிஷாவின் நிலைமை பாவம்தான்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. துணை நடிகையாக தன்னுடைய கெரியரை ஆரம்பித்த திரிஷா இன்று டாப் ஒன் நடிகையாக மாறியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு ஹீரோயினாக 20 வருடம் என்பது யாராலும் முடியாத ஒன்று. ஆனால் திரிஷாவை பொறுத்தவரைக்கும் இன்னும் அடுத்த பத்து வருடத்திற்கும் இவர்தான் நம்பர் ஒன் நடிகையாக இருப்பார் போல.

அந்தளவுக்கு தன்னுடைய ஹெல்த் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார். இன்னும் ஸ்லிம்மாக 20 வயது நடிகை போல இருந்துவருகிறார். இதுதான் அனைவருக்குமான ஆச்சரியமாக இருக்கிறது. அதே அழகு, சிரிப்பு என கொஞ்சம் கூட அவருடைய அழகில் எந்தளவு குறையில்லை. அதனால்தான் அடுத்த இன்னிங்ஸையும் சக்ஸசாக கொண்டு போகிறார்.

96படத்திற்கு பிறகு திரிஷாவின் கெரியர் அவ்வளவுதான் என்றுதான் நிலைமை இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் படம் வெளியானது. அதில் குந்தவையாக ஒரு அழகு பதுமையாக ஜொலித்தார் திரிஷா. வரிசையாக படங்கள் வரத் தொடங்கியது. விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் என அடுத்தடுத்து சூப்பர் ஹீரோக்களுடன் நடித்து விட்ட இடத்தை பிடித்தார்.

இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கிலும் அவருக்கான வாய்ப்பு கதவு திறக்க தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் திரிஷா ஒரு வீடியோவை ஷேர் செய்திருக்கிறார். அதில் ஒருவர் 40 வயதை தொட்டதும் என்னெல்லாம் தேவைப்படுகிறது? எதையெல்லாம் தேடி ஓட வேண்டியிருக்கிறது என்பதை பற்றி விளக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்திருக்கிறது.

trisha

trisha

அதை பார்த்த ரசிகர்கள் திரிஷா இப்படித்தான் இருக்கிறார் போல என கமெண்ட்டுகளில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு மீடியாவிலோ அல்லது ஒரு செலிபிரிட்டியாக இருக்கும் பட்சத்தில் எந்த விதத்திலும் தன்னுடைய தோற்றம் மாறிவிடக் கூடாது என்பதற்காக மிகவும் மெனக்கிடுவார்கள். அப்படித்தான் அந்த வீடியோவிலும் இருக்கிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top