Categories: Cinema News latest news

இவரோட நடிக்கணும்னு ஆசை.. இவ்ளோ வெளிப்படையா சொல்லிட்டாங்களே திரிஷா

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. துணை நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த இவர் விஜய் அஜித் சூர்யா கமல் ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்தார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் இவருக்கு ஃபேன்ஸ் ஃபாலோயர்ஸ் அதிகம்.

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் திரிஷா. அதற்காக பல ஊர்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்து வருகிறார். சமீபத்தில் கேரளா சென்ற திரிஷாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் மலையாளத்தில் எந்த நடிகருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்டதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் ஃபகத் பாசில் என கூறினார் திரிஷா.

அவர் நடித்த ஆவேசம் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தது. அவருடன் நடிக்கத்தான் நான் ஆசைப்படுகிறேன் எனக் கூறினார் த்ரிஷா. எந்த ஜானர் மாதிரியான படத்தில் அவருடன் நடிப்பீர்கள் என கேட்டதற்கு அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. ஏன் கமல் கூட நடிக்கலையா? அதுபோல இந்த மாதிரியான ஜானர் அந்த மாதிரியான கதை என்று பார்க்காமல் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என கூறி இருக்கிறார் திரிஷா.

மலையாளத்தில் ஃபகத் பாசிலுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. த்ரிஷாவின் இந்த பதிலை கேட்டதும் அங்குள்ள ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி அவர்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தற்போது திரிஷா அவருடைய இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்திருக்கிறார். எந்தெந்த நடிகர்களுடன் நடித்து தன்னுடைய கெரியரை பில்ட் செய்தாரோ மீண்டும் அதே நடிகர்களுக்கு ஜோடியாக தான் மீண்டும் இப்போது நடித்து வருகிறார்.

fahad

அழகு பதுமையாக தென்னிந்திய சினிமாவின் குயினாக திகழ்ந்து வருகிறார் திரிஷா. அடுத்து சூர்யாவின் 45 வது படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்