Categories: Cinema News latest news

மதுரையில் வைகைப்புயலுக்கு பிரம்மாண்டமான பேலஸ்… குடும்பத்தினருக்காக கட்டியது இத்தனை வீடுகளா?

வைகைப்புயல் என்றாலே வடிவேலு தான். இன்றைக்கும் நாம் அவரது படங்களைப் பார்த்தால் மனம் விட்டு, வாய்விட்டுச் சிரித்து மகிழ்வோம். அந்தளவுக்கு அவர் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டார். பாடி லாங்குவேஜ்ல சிரிப்பு காட்ட அவரை மிஞ்ச ஆளே கிடையாது. அது தான் அவருக்கு மூலதனம். கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறியவர். இவர் மதுரை மற்றும் சென்னையில் எத்தனை வீடுகளைக் கட்டியுள்ளார்? மதுரையில் அவரது பிரம்மாண்ட பேலஸ் எங்குள்ளதுன்னு பார்ப்போமா…

எளிய குடும்பத்தில் பிறந்தவர் வைகைப்புயல் வடிவேலு . மதுரையில் வைகை சிட்டி என்ற பெயரில் ஒரு பேலஸ் கட்டியுள்ளார். இவருக்கு மதுரை மற்றும் சென்னையில் 25 வீடுகள் சொந்தமாக உள்ளன. பொதுவாக வடிவேலுவுக்கு உதவும் குணம் இல்லை என்பார்கள். ஆனால் இவர் உடன் பிறந்த சகோதரர்கள், மனைவி உடன் பிறந்த சகோதரர்கள் அனைவருக்குமே வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

madurai vadivelu palace

தான் எப்படி பிரம்மாண்டமாக வாழ்கிறாரோ அதே போன்ற வசதிகளுடன் கூடிய வீட்டைத்தான் அவர்களுக்கும் கட்டிக் கொடுத்துள்ளார். மதுரையில் தான் தனது முதல் வீட்டை கட்டியுள்ளார். அவருக்கு மட்டும் அல்லாமல் அவருடைய சகோதரர்களுக்கும் சேர்த்தே கட்டியுள்ளார். இங்கு தான் அவரது தாயார் கடைசி வரை வாழ்ந்துள்ளார். எங்கு இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு தடவை பொங்கல் விழாவுக்கு இங்கு வந்துவிடுவார்.

வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனுக்காக ஒரு வீடு கட்டியுள்ளார். ஆனால் இங்கு யாரும் இப்போது தங்கவில்லை. அவரது மகன் கருப்பாயூரணியில் வடிவேலு கட்டிக்கொடுத்த வீட்டில் இருக்கிறாராம். வடிவேலு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை போட்டோ பிரேமுக்குக் கண்ணாடியைக் கட் பண்ற வேலையைச் செய்து வந்தார். அவரது சகோதரர்களும் அதே வேலையைப் பார்த்து வருகிறார்கள்.

வடிவேலுவின் சகோதரி, இளைய சகோதரருக்கும் பிரம்மாண்டமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். மதுரையில் இருந்து மானாமதுரை போகிற வழியில் கீழடியைத் தாண்டியதும் பைபாஸ்லயே வைகை சிட்டி என்ற பெயரில் பேலஸ் கட்டியுள்ளார். இங்கு மிகப்பெரிய ஆர்ச் இருக்கும். இதுதான் வடிவேலுவுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம். இங்கு நடுவுல தான் இந்த பேலஸ்சைக் கட்டி இருக்காரு வடிவேலு.

அந்த பேலஸ்சுக்கு வடிவேலு மட்டும் தான் எப்போவாவது வந்து போவாராம். வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. குடும்ப உறுப்பினர்கள் கூட அந்த பேலஸ் கட்டின புதிதில் தான் வந்து போனார்களாம். வெள்ளைக் கலரில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக உள்ளது. இது மதுரைக்கார்களுக்கே தெரியாதாம். வடிவேலுவுடன் நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பர்களே அவரை ஏமாற்றியுள்ளார்களாம். இவர் வாங்கிய பல வீடுகளை இவரை ஏமாற்றி எழுதி வாங்கிவிட்டார்களாம்.

vadivelu son house

மதுரை பக்கத்தில் உள்ள சிறிய ஊரில் ஒரு கூலித்தொழிலாளியின் மகளைத் தான் தனது மகன் சுப்பிரமணியனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தார் வடிவேலு. கருப்பாயூரணியில் தான் இவரது வீடு உள்ளது. இதே ஏரியாவில் தான் அவரது 3 மகள்களில் ஒருவருக்கு வீடு உள்ளது. மற்ற மகள்களுக்கு அவர்களைக் கட்டிக் கொடுத்த ஊரிலேயே வீட்டையும் கட்டிக் கொடுத்துள்ளார். வடிவேலு மதுரைக்கு எப்போ வந்தாலும் அவர் தங்கும் வீடு இந்த மகளின் வீடு தானாம்.

வடிவேலுவுக்கு சென்னை சாலிகிராமத்தில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் தான் தற்போது வடிவேலு வசித்து வருகிறார். இந்த வீடு முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு நேர் எதிரில் உள்ளது. இதே ஊரில் வடிவேலுவுக்கு இன்னொரு வீடும் உள்ளது. இதுவும் முதல் வீடு மாதிரியே இருக்கும். கதவு, வீட்டோட கலர் எல்லாமே அப்படியே இருக்கும். நடிகர் வடிவேலு தனது அலுவலகமாக தற்போது இந்த வீட்டைப் பயன்படுத்தி வருகிறாராம்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v