Connect with us

Cinema News

மரியாதையே இல்லையா!.. இளையராஜாவை தொடர்ந்து காப்பிரைட்ஸை கையில் எடுக்கும் வைரமுத்து..

கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற படைப்பின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் வைரமுத்து. அந்த படைப்புக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இதுவரை 7500 பாடல்களை எழுதியிருக்கிறார். 39 நூல்களை படைத்திருக்கிறார். சிறந்த பாடலுக்கான தேசிய விருதை 7 முறை பெற்ற ஒரே பாடலாசிரியர் இவர்தான். தமிழ் நாட்டு அரசின் 6 விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் என் அனுமதியில்லாமல் என்னுடைய பாடல்வரிகளை இந்த தமிழ் திரையுலகம் பயன்படுத்தி வருகிறது என ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார் வைரமுத்து. இதுவரை இளையராஜாதான் தன்னுடைய அனுமதியில்லாமல் அவருடைய இசையை பயன்படுத்தி வருகிறார்கள் என காப்பிரைட்ஸ் பிரச்சினையை கொண்டு வந்தார். இப்போது வைரமுத்துவும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்திரையுலகம் திரைப்படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை. சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை. காணும் இடங்களில் கேட்டதுமில்லை.

செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன். ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள்? என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால் என்னை ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்று வைரமுத்து கூறியிருக்கிறார். அவர் சில குறிப்பிட்ட பாடல் வரிகளை கோடிட்டு இதெல்லாம் இப்போது படத் தலைப்புகளாக வந்துள்ளன என தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

பொன்மாலைப்பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊர தெரிஞ்சுக்கிட்டேன்,பனிவிழும் மலர்வனம், வெள்ளைப்புறா ஒன்று,பூவே பூச்சூடவா, ஈரமான ரோஜாவே,மௌன ராகம், கண்ணாளனே, நீ தானே என் பொன் வசந்தம் என இன்னும் எத்தனையோ பாடல் வரிகள் இருக்கின்றன என கூறியிருக்கிறார் வைரமுத்து.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top