மிஸஸ் அண்டு மிஸ்டர் படத்தில் நடித்து இயக்கியவர் வனிதா. இந்தப் படத்தில் இளையராஜாவின் பாடலில் ஒன்றான சிவராத்திரி பாடலைப் பயன்படுத்தினார். இளையராஜாவும் வழக்கம்போல கேஸ் போட்டார். அதற்கு வனிதா என்ன சொல்கிறார்னு பாருங்க.
அவரு தான் இசை அமைச்சாரு. அவருக்கு நன்றி சொல்றதுக்குத் தான் கார்டு உபயோகிச்சோம். நன்றி என்ற கார்டை வச்சி விளம்பரம் பண்ணிட்டேன். எனக்குப் பணம் வேணும்னு கேட்குறாங்க. அப்படி பணம் கொடுக்குற அளவுக்கு சம்பாதிக்கவும் இல்லை. நீங்க மரியாதை வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் அந்த கார்டையும் எடுத்துட்டோம்.
பாடலைப் பொருத்தவரைக்கும் என் மகளைத் தான் கேட்கணும். நான் தான் டைரக்டர். என் மகள் தான் சைன் போட்டு வாங்கினாங்க. சோனி மியூசிக்ல தான் கேட்கணும். இளையராஜா எல்லாருக்கிட்டேயும் கேஸ் போடுறாருன்னு எல்லாருக்கும் தெரியும். இந்தப் பிரச்சனை எல்லாருக்கும் தெரியும். அவருக்கு வேற வேலை இல்லையான்னு கார் டிரைவர்கூட கேட்குறாரு.
இது அவருக்கு பெருமையை சேர்க்காது. ரிமூவ் பண்ணிருன்னு சொல்லிருந்தா உடனே எடுத்துருப்பேன். நான் எந்த தவறும் செய்யல. என்னோட அட்வகேட் இதைப் பார்த்துப்பாங்க. இந்த கேஸ் உண்மையிலேயே யாருக்கிட்ட ரைட்ஸ் இருக்குன்னு சொல்லும் என்கிறார் வனிதா.
ஆரம்பத்தில் வனிதா இளையராஜா தான் இசைக்கே கடவுள். அவர் வீட்டுல நான் மருமகளா வளர்ந்தேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா எவ்வளவு பெரிய லெஜண்ட். எத்தனையோ சாதனைகளைப் படைத்துள்ளார். சமீபத்தில் கூட உலகமே வியக்கும் வகையில் சிம்பொனி இசையை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். அப்படி இருக்க அவருக்கு மட்டும் ஏன் தொடர்ந்து இப்படி எல்லாம் சர்ச்சைகள் வருகிறது என்று ரசிகர்கள் பலரும் பரவலாக பேசி வருகின்றனர். அதே நேரம் இளையராஜா கேட்பது சரியா, தவறா என்பதை வைத்து ஒரு பட்டிமன்றமே நடத்தி விடலாம் என்றும் சிலர் பேசுவதை வைத்துப் பார்க்கும்போது நமக்கே எண்ணத் தோன்றுகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…