Categories: Cinema News latest news

படத்துல அந்த மாதிரி சீன்லாம் இருக்கு! அதனாலதான் ராபர்ட்!.. வனிதா ஓப்பன்

புது அவதாரம் எடுக்கும் வனிதா:

வனிதா என்றதுமே கான்ட்ரவர்சி இப்படித்தான் நாம் நினைவுக்கு வரும். அவர் பேசும் விதம் எதையும் தைரியமாக வெளிப்படையாக பேசுவது அவருடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் என அவரைச் சுற்றி சர்ச்சைகளாகத்தான் இதுவரை செய்திகள் வெளி வந்திருக்கின்றன. முதன் முறையாக வனிதா ஒரு இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் இயக்கிய திரைப்படம் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தின் மூலம் தன்னுடைய மகளையும் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தி இருக்கிறார் வனிதா .

இந்த படம் வரும் ஜூலை நான்காம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் ராபர்ட் ,கிரண், பவர்ஸ்டார் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் வனிதா ராபர்ட் ஆகிய இருவரும் தான் லீடு ரோலில் நடித்துள்ளனர். வனிதாவை பொருத்தவரைக்கும் அவருடைய விவாகரத்து மீண்டும் திருமணம் என அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் சோசியல் மீடியாக்களில் மிகவும் வைரலானது.

vanitha

பிரபலத்தை தேடிக் கொண்ட வனிதா:

அதன் பிறகு பிக் பாஸில் கலந்து கொண்டு அவர் யார் என்பதை வெளிக்காட்டினார். பிக் பாஸுக்கு பிறகு அவருடைய வாழ்க்கையில் வெளிச்சம் வந்தது என்று சொல்லலாம். பிக் பாஸை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் நடக்கும் பல ரியாலிட்டி ஷோக்களிலும் போட்டியாளராகவும் நடுவராகவும் கலந்து கொண்டு தனக்கான ஒரு பிரபலத்தை தேடிக்கொண்டார்.

அதன் பிறகு படங்களில் நடித்து வந்த வனிதா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் .இந்த படத்தை பற்றி தற்போது youtube சேனல்களில் பேசி வருகிறார் வனிதா .அதில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தேவயானி படத்தின் ஒரு விழாவிற்கு சென்றபோது தேவயானி மேடையில் பின்னாடி நிற்க வனிதா முன் இருக்கையில் உட்கார்ந்து இருந்தார் .அதன் பிறகு தேவயானியை அழைத்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டார் வனிதா. ஆனால் அதன் பிறகு பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி என்னவெனில் தேவயானி முன்பு திமிராக உட்காரந்திருந்த வனிதா என வெளியானது.

ராபர்ட் ஏன்?:

இதைப் பற்றியும் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார் வனிதா. யாரும் யாரைப் பற்றியும் ஒப்பிட்டு பேசக்கூடாது. அடுத்து என் மகளையும் தேவயானி மகளையும் ஒப்பிட்டு செய்திகளை வெளியிட்டனர். இதெல்லாம் தவறு என்றெல்லாம் பல விஷயங்களை பகிர்ந்தார். இந்த நிலையில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் ராபர்ட்டை ஏன் சூஸ் பண்ணேன் என்பதை பற்றியும் கூறி இருக்கிறார் வனிதா. இந்த படத்தை பொறுத்த வரைக்கும் என்னுடைய வயதிற்கு ஏற்ப ஒரு நடிகர் தேவைப்பட்டது. அதற்காக புது முகத்தை எல்லாம் நடிக்க வைக்க முடியாது.

ஏனெனில் எனக்கும் நல்ல வளர்ந்த ஒரு மகள் இருக்கிறாள் .அதனால் என்னுடைய வயதுக்கு ஏற்ற மாதிரியும் நன்கு பழகிய ஒரு முகமாகவும் இருக்க வேண்டும் என நினைத்தோம். அது மட்டுமல்ல படத்தில் சில நெருக்கமான காட்சிகளும் இருக்கின்றன. இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது என்னுடைய டைரக்டர் குழுவில் இருந்து ராபர்ட்டை அனைவரும் சொன்னார்கள். ஏற்கனவே எனக்கும் ராபர்ட்டுக்கும் இடையே நல்ல ஒரு நட்பு இருக்கிறது.

robert

ராபர்ட் கையில் இருந்த அந்த டாட்டூ:

இரண்டு பேருக்குமே கடந்த காலம் என்ற ஒரு வாழ்க்கை இருந்தது. ஆனால் அதை எல்லாம் பிரச்சனையாக பார்க்காமல் இந்த படத்தில் நடித்தோம். ராபர்ட் இந்த கதைக்கு வந்த பிறகுதான் படம் இன்னும் சிறப்பாக அமைந்தது என்றெல்லாம் வனிதா கூறி இருக்கிறார். இதற்கு முன் ராபர்ட்டும் வனிதாவும் திருமணம் செய்ய போகிறார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளியானது .அந்த நேரத்தில் வனிதா விஜயகுமார் என ராபர்ட் தன் கையில் டாட்டூவாக குத்திருந்தார். இப்போது அதை மைக்கேல் ஜாக்சன் என மாற்றிக் கொண்டார் என வனிதா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்