லைக்கா செய்த வேலை!.. 3வது இடத்திற்கு போன ரஜினி!.. சூப்பர்ஸ்டாரை கவுத்துப்புட்டாங்க!...

 

Vettaiyan: கோலிவுட்டில் அதிக பட்ஜெட்டில் படம் தயாரித்து வரும் நிறுவனம்தான் லைக்கா புரடெக்‌ஷன்ஸ். ரஜினி, அஜித் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனம் தயாரித்த முதல் படம் விஜய் நடித்த கத்தி. ரஜினி நடித்த தர்பார் படத்தை இந்நிறுவனமே தயாரித்தது.

ஆனால், இந்த படம் லைக்காவுக்கு லாபத்தை கொடுக்கவில்லை. அதனால்தான் அதே நிறுவனம் தயாரிப்பில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து கொடுத்தார். ஆனால், அந்த படமும் ஓடவில்லை. கமலை வைத்து இந்தியன் 2 படத்தை தயாரித்தார்கள். அந்த படமும் ஊத்திகொண்டது.

கடந்த சில வருடங்களாகவே லைக்கா தயாரிக்கும் படங்கள் லாபத்தை கொடுப்பதில்லை. மணிரத்னத்தோடு இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் படம் மட்டுமே அவர்களுக்கு லாபத்தை கொடுத்தது. லால் சலாம் படத்திற்கு பின் ரஜினி நடித்த வேட்டையன் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது.

லைக்கா செய்த வேலை!.. 3வது இடத்திற்கு போன ரஜினி!.. சூப்பர்ஸ்டாரை கவுத்துப்புட்டாங்க!...

இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கினார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கும் ரஜினி ஒரு பிரச்சனையில் சிக்க அவர் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே படத்தின் கதை. அதோடு, கல்வி நிறுவனங்கள் என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையையும் இப்படத்தில் காட்டப்பட்டிருந்தது.

இந்த படத்தில் ரஜினியோடு மஞ்சு வாரியர், துஷரா விஜயன், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் வெற்றியா தோல்வியா என்பது யாருக்கும் தெரியவில்லை. லைக்காவுக்கு இந்த படமும் நஷ்டம்தான் என்கிறார்கள் சிலர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல. மலேசியாவிலும் இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. மலேசியாவில் இந்த படம் ஒரு கோடியை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எழுபது லட்சத்து 20 ஆயிரத்தை மட்டுமே அங்கு வசூல் செய்திருக்கிறது. இது விஜயின் கோட், சிவகார்த்திகேயனின் அமரன் படம் மலேசியாவில் செய்த வசூலை விட குறைவு. எனவே, மலேசியா டிரேடிங் வட்டாரத்தில் ரஜினி 3வது இடத்திற்கு சென்றுவிட்டாராம்.

தப்பான நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்தது மற்றும் சரியாக புரமோஷன் செய்யாத காரணத்தால்தான் வேட்டையன் படம் மலேசியாவில் வசூலை பெறவில்லை என சொல்கிறார்கள். அதேநேரம், அடுத்து ரஜினி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டால் எல்லாம் ஒரே நாளில் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web