Categories: Cinema News latest news

விடாமுயற்சி வெளியாகாம போனதுக்கு காரணமே இவர்தானாம்… ரிலீஸ் எப்போ தெரியுமா?

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளியாகும் படம் விடாமுயற்சி. பொங்கலுக்கு வருகிறது என்று அறிவித்ததும் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். ஆனால் விடாமுயற்சி முதல்ல பொங்கலுக்கு வெளியாகாதுன்னு முதல்ல சொன்னவர் வலைப்பேச்சாளர் பிஸ்மி தான். இந்தப் படத்தில் என்ன நடந்து கொண்டு இருக்குங்கற உள்விவகாரம் தெரிந்தால் போதும். அது வெளியாகுமா, வெளியாகாதான்னு தெரிந்து விடும் என்கிறார். இதுகுறித்து அவர் மேலும் சொல்வது இதுதான்.

subashkaran, bismi

விடாமுயற்சின்னு பேரு வைக்கிறதுக்குப் பதிலா இடியாப்ப சிக்கல்னே பேரு வச்சிருக்கலாம். இன்னொரு பக்கம் லைகா நிறுவனத்துக்கே பெரிய பொருளாதார நெருக்கடி. மொபைல் வியாபாரம் குறைந்து போனது. 90 சதவீத பணியாளர்களையும் பணிநீக்கம் செய்துள்ளார்கள். இன்னொரு பக்கம் படங்களும் கைகொடுக்கவில்லை.

இந்தியன் 2, வேட்டையன், லால்சலாம்னு எல்லாமே வசூலில் ஜொலிக்கவில்லை. இன்னொரு பக்கம் விடாமுயற்சியை எடுத்துக்கொண்டால் படத்துக்கு பிரேக் டவுன் படத்தின் கதைதிருட்டும் காரணம். விஷயம் தெரிந்ததும் நான் அபராதம் கட்டிக்கிறேன்னு சொல்றாங்க. அதனால இது கதை திருட்டு தான். அவங்களுக்கு அது தெரிந்து 100 கோடி கேட்டு இப்போ 50 கோடி, 30 கோடின்னு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கு.

ஆதாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு லண்டன்ல இருந்து சுபாஷ்கரன் தலைமையில் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. தமிழ்க்குமரன், கான்பரன்ஸ் கால்ல அஜீத் வர்றாரு. அந்தத் தகவல் உடனே கிடைத்து டுவிட்டர்ல போட்டேன். அதுக்கு ரசிகர்கள் திட்டிக்கிட்டு இருந்தாங்க. இது வராதது எனக்கு தனிப்பட்ட முறையில வருத்தம்.

ஜனவரி 10 தான் ஜாக்பாட் தேதி. கிட்டத்தட்ட 10 நாள்கள் விடுமுறை. இந்தநாளில் வெளியானால் முந்தைய சாதனைகளை முறியடித்து விடும் அளவு வாய்ப்பு இருந்தது. ஆனா துரதிர்ஷ்டவசமா அதை மிஸ் பண்ணிட்டாங்க. எவன் ஒருவன் திரையில் பார்த்த பிம்பத்துக்காக மற்றவர்களைத் தரக்குறைவாகப் பேசினால் அவன் யாருடைய ரசிகராக இருந்தாலும் முட்டாள்தான். இவர்கள் தான ஆபாசத்தாக்குதல் நடத்துவாங்க. இவங்க ஒரு மனநோயாளி அல்லது முட்டாள்தான்.

கதை திருட்டுக்காக ஒரு கட்டத்துல ஃபைன் போக புராஜெக்ட் ஷேரும் கேட்டாங்களாம். இதெல்லாம் சேர்ந்துதான் இந்தப் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது இயக்குனருக்கும் சொல்லப்பட்டு இருக்கும். லைகா நிறுவனத்துல ஒரு நபர் இருக்காரு. அவர் லீகலான வேலைகள் எல்லாம் செய்றவர்.

அவர்தான் பேரமண்ட் பிக்சர்ஸ் லீகல் நோட்டீஸ் அனுப்பின பிறகு அதுக்கு ரிப்ளை பண்ற வேலையைப் பார்த்தாரு. இப்போ சுபாஷ்கரன் ஏதோ ஒரு வேலைக்காக அவரை லண்டனுக்கு அனுப்பிட்டாரு. அதனால அவரு அவரோட வேலையை இன்னொருத்தருக்கிட்ட கொடுக்கும்போது இதெல்லாம் நான் பண்ணிருக்கேன். இதை நீங்க ஃபாலோ பண்ணுங்கன்னு சொல்லாம போயிட்டாரு.அதனால டிலே ஆகிருக்கு.

அன்றைக்கு நடந்த பேச்சுவார்த்தையில முடிவு பண்ணினது என்னன்னா ஜனவரி கடைசி 26 ரிலீஸ் தேதியாக இருக்கும். என்னைப் பொருத்தவரை பஞ்சாயத்துகள் தீர்ந்து படம் ரிலீஸாக அதையும் தாண்டி ஒரு வாரகாலம் ஆகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v