Connect with us

Cinema News

விடுதலை 2 படத்தில் சென்சார் போர்டு நீக்கிய காட்சிகள்… அடேங்கப்பா இவ்ளோ இருக்கா?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சுவாரியார் நடித்த விடுதலை 2 படம் இன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இரு பாகங்களுக்கும் இளையராஜா தான் இசை. படத்தில் கெட்ட வார்த்தை வசனங்கள் அதிகமாக இருந்தனவாம். அதை சென்சார் போர்டு கட் பண்ணியிருக்காங்க. என்னென்னன்னு பார்க்கலாமா…

முதல் பாகத்தில் வாத்தியார் என்ற கதாபாத்திரம் மட்டும் விஜய் சேதுபதிக்கு முன்னோட்டமாகக் காட்டப்பட்டு இருக்கும். இந்தப் படத்தில் அவர் எப்படி உருவாகிறார் என்பதுதான் கதை.

தமிழகத்தில் கலியப் பெருமாள் அவர்களோட வாழ்க்கையைப் பின்பற்றி வாழ்ந்து வரும் புரட்சியவாதி. ஒரு தலைமறைவு வாழ்க்கை. எப்படி அவர் காவல் துறையை எதிர்கொண்டாங்க? மக்களுக்கு என்ன நல்லது செஞ்சாங்க?

எதனால அரசு அவர்களை வேட்டையாட வைத்தது? இந்த மாதிரியான சுவாரசியமான கதைகளமாக விடுதலை 2 உள்ளது. குறிப்பாக முதல் பாகத்தில் காட்டப்பட்ட ரயில் விபத்து குறித்து இந்தப் படத்தில் சொல்வார்களா? மக்களுக்கான ஒரு அமைப்பு ரெயில் விபத்துக்குக் காரணமா இருக்குமா?

இப்படி பல்வேறு விஷயங்கள் முதல் பாகம் பார்க்கும்போது நமக்கு கேள்விகளாக எழுந்தன. அதற்கு இந்தப் படம் விடை சொல்லுமா என்பது தான் கதை. அதனால் படம் பார்க்க ஆர்வமாக ரசிகர்கள் திரையரங்கில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

18வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையில் சென்சார் போர்டு ஏ சான்றிதழைக் கொடுத்துள்ளது. மக்கள் பிரச்சனையை எல்லாரும் பார்க்க்கூடாதா? இனம் என்றால் என்ன? ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் யார்? ஏன் பழங்குடியினர்னா டிரஸ்ஸை அவிழ்த்துட்டு போலீஸ் அடிக்குது?

எதுக்கு மலையிலேயே பதுங்கி இருக்காங்க? இது மாதிரியான விஷயங்கள் 17 வயதில் உள்ள பிளஸ் 2 மாணவனுக்குத் தெரிந்தால் தானே அவன் 30 வயசுல ஒரு சமூகத்துக்கான மனிதனாக, அதுசார்ந்து சிந்திக்கக்கூடிய ஆளுமை உடையவனாக வருவான்.

ஆனா ஏன் அதை எல்லாம் தடுக்கப்படுகிறது என்று ஒரு கேள்வி எழுகிறது. இந்தப் படத்தில் நீளத்தைக் குறைக்கச் சொல்லி இருக்கிறார்கள் சென்சார் போர்டு குழுவினர். சாதீய ஒடுக்குமுறை தொடர்பான வசனங்களில் சிலவற்றை நீக்கி இருக்கிறார்களாம். பொதுவெளியில் சாதி எதற்காக பயன்படுத்துகிறது? சாதியைத் தக்க வைக்கவா? சாதியை ஒடுக்குகிறார்களா? கெட்ட வார்த்தையை நீக்கி இருக்கிறார்கள்.

கெட்ட வார்த்தையை ஒவ்வொரு முறை பேசும்போதும் ஒருவன் ஆணாதிக்கத்துக்குள் செல்கிறான். வெற்றிமாறனின் வடசென்னை படத்திலேயே எதற்கெடுத்தாலும் பேசுறாங்கன்னு சொன்னாங்க. அதை உழைக்கும் மக்கள், தலித் மக்கள், கருப்பு நிறத்தவர்கள் இவர்கள் தான் நிறைய கெட்டவார்த்தையைப் பேசுறாங்கன்னு காட்டுறாங்க.

அந்த வகையில் இந்தப் படத்துலயும் நாலு கெட்டவார்த்தையைப் பயன்படுத்தி இருக்காங்க. அதையும் சென்சார் போர்டு நீக்கிருக்காங்க. ஈழத்தமிழர்கள் கொடுமைப்படும்போது பெத்த தாயோடு பையனை புணரச் சொல்லி கொடுமைப்படுத்துனாங்க…

அதுமாதிரியான ஒரு காட்சி இந்தப் படத்தில் இருக்கும் என்று தெரிகிறது. அந்த வார்த்தையை மியூட் பண்ணிருக்காங்களாம். அரசின் அடிப்படைக் கட்டமைப்பை மாத்தணும்கறதைத்தான் படம் பேசுது. ஆனா அரசு, அரசாங்கம், தேசிய இன விடுதலை போன்ற வார்த்தைகளையும் சென்சார் போர்டு நீக்கி இருக்கிறார்களாம்.

அனிமல் படத்தில் அவ்வளவு ஆபாசக்காட்சிகள் இருக்கு. ஆனாலும் தணிக்கைக்குழு நிர்வாணமா படுக்கற காட்சிகளைக் கூட காட்டுவோம். ஆனா விடுதலை 2 மாதிரி படத்தில் பேசுகிற வசனங்கள், காட்சிகள்தான் ஆபத்து என்கிறது. மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் ஜீவ சகாப்தன் தெரிவித்துள்ளார்.

முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் மத்தியில் இருந்து பாசிடிவான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் படத்தில் சூரியை விட விஜய் சேதுபதியை பிரதானமாகக் காட்டி இருக்கிறார்கள். அது தவிர அவருடன் ஜோடி சேர்ந்த மஞ்சுவாரியரின் நடிப்பும் அருமையாக உள்ளது. இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி உள்ளது என்றும் சூரியின் யதார்த்தமான நடிப்பு விடுதலை, கருடன், கொட்டுக்காளி போல இதுலயும் சிறப்பாக உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top