Connect with us

Cinema News

‘டேய் தகப்பா’ ரேஞ்சில் சண்டை போடும் மகன்.. தந்தையர் தினத்தில் வீடியோவை வெளியிட்ட விக்கி

இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என இரு மகன்கள் இருக்கிறார்கள். போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் நயன் நடிக்க அதிலிருந்துதான் நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே நட்பு உருவானது.

அது அப்படியே காதலாக மாற 7 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். அதன் பிறகு அனைவர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு திரைபிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் வந்திருந்து வாழ்த்தினார்கள். நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார்.

இந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை வைத்து எடுத்தார். அந்தப் படமும் சுமாரான வரவேற்பை பெற்றன. இப்போது பிரதீப் ரெங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் பாடலாசிரியராகவும் இருந்து வருகிறார். இவர் எழுதிய பாடல்களுக்கு பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. இந்த நிலையில் தந்தையர் தினமான இன்று விக்னேஷ் சிவன் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் தன் மகன்களுடன் சண்டை போடுவது மாதிரி அந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. உயிர் என்ற மகன் விக்னேஷ் சிவனை வாடா போடா என சொல்லி சண்டை போடுகிறார்.

அதை ஒரு தாயாக நயன் அருகில் இருந்து ரசிக்கிறார். எந்தவொரு செலிபிரேஷன் நாளாக இருந்தாலும் குடும்பமாக இருந்து அதை கொண்டாடுவது நயன் விக்கியின் வழக்கம். அந்த வகையில் தந்தையர் தினத்தையும் இவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top