Categories: Cinema News latest news

விஜய் ஆண்டனியின் வித்தியாசமான படமா இருக்குமோ?.. ககன மார்கன் மோஷன் போஸ்டரே தெறிக்குதே!..

இசையமைப்பாளராக ஹிட் பாடல்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து ஆரம்பத்தில் வெற்றியை ருசித்து வந்தார். பிச்சைக்காரன் படமெல்லாம் அவருக்கு மிகப்பெரிய வசூல் சாதனை படமாக மாறியது. ஆனால், அதன் பின்னர் என்ன ஆனதோ தெரியவில்லை அவர் நடிப்பில் வெளியான கொலை, ரத்தம், எமன், பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் என பல படங்கள் பல்பு வாங்கின.

ஒரு பக்கம் காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக மாறி வெற்றியை கொடுக்க போராடி வரும் நிலையில், இன்னொரு பக்கம் இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் ரசிகர்களை ரொம்பவே டார்ச்சர் செய்து வருகின்றனர்.

ஆனால், எப்படியாவது வெற்றி கொடுத்தாக வேண்டும் என தொடர்ந்து வித்தியாச முயற்சியில் இவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் ஆண்டனி நடிப்பில் அரை டஜன் படங்கள் உருவாகி வருகின்றன. வள்ளி மயில், அக்னி சிறகுகள், காக்கி, சக்தி திருமகன் உள்ளிட்ட படங்கள் எப்போது வெளியாகும் என தெரியவில்லை.

ஆனால், அடுத்து அவர் நடிப்பில் உருவாகி வரும் மார்கன் படம் தான் வெளியாக போகிறது. அதன் மோஷன் போஸ்டரே மிரட்டுகிறது. உடம்பில் ஒரு பக்கம் முழுவதும் கருப்பு மை பூசிக் கொண்டு இந்த படத்தில் தான் விஜய் ஆண்டனி வித்தியாசமாக நடித்துள்ளார். மாற்றான் எஃபெக்ட்டில் மோஷன் போஸ்டர் உள்ள நிலையில், இயக்குநர் லியோ ஜான் பால் கண்டிப்பாக விஜய் ஆண்டனிக்கு நல்ல படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூன் 27ம் தேதி இந்த படம் வெளியாகிறது.

Saranya M
Published by
Saranya M